முன்மாதிரி
நீ நீரைப்போல் வாழு
நீருக்குத்தான்
எத்தனை பெருமை
நீர் புனிதமானது
கலங்கமில்லாதது
எந்த வண்ணத்தையும்
சாராதது
நீரில்லாமல்
எந்த வண்ணமும்
அமையாது...
நீருக்கு ருசியில்லை
நீரில்லாமல்
எந்த ருசியுமில்லை
பிரிவினை
நீருக்கு தெரியாது
தலைகனம் கிடையாது
எவ்வளவு மேலிருந்தாலும்
கீழ் நோக்கிதான்
தன் பயணத்தை தொடங்கும்
முடிவில் மேல்நோக்கி செல்லும்
மீண்டும் கீழ் நோக்கி வரும்
எல்லா ஜீவன்களையும் வாழவைக்கும்
நீ நீரைப்போல் வாழு...
நீருக்கு நிரந்தர
உருவம் கிடையாது
அது எங்கும் எதிலும் தன்னை
புகுத்திக்கொண்டு வாழ்ந்துக்கொள்ளும்
கறை படியாத கரங்களுடன்
கறையை போக்கி
உதவி கரம் கொடுத்து
வாழவைக்கும்
நீரைப்போல்
சாந்தமும் இல்லை
நீரைபோல்
ஆக்ரோஷமும் இல்லை
நீ நீரைப்போல் வாழு...