அவள் என்னுடையாள்

கொடி இடையாள் !
கொம்புத்தேன் இதழ் சுவை உடையாள் !

செந்தாமரை நிறமுடையாள் !
சித்திரம் போல் அழகுடையாள் !

தீம் சுவை கன்னம் உடையாள்
தென்றல் ஒத்த தீண்டல் உடையாள் !-என்மேல்
தீராத காதல் உடையாள் !

மென்பஞ்சு தேகம் உடையாள் !
பிஞ்சு மழலை மென் விரல் உடையாள் !

பிரம்மாண்ட தனம் உடையாள் !-என்னை
பித்தம் கொள்ள செய்யும் அழகுடையாள் !
பின்னலிட்ட அழகு ஜடை உடையாள் !

வேல்விழி பார்வை உடையாள் !
வாழை தண்டின் கால்கள் உடையாள் !
வசதியாய் வளம் உடையாள் !

இத்தனையும் அவள் உடையாள் !

அவள் என்னுடையாள் !

எழுதியவர் : முபா (22-Jun-17, 12:07 pm)
பார்வை : 436

மேலே