புதுக் கவிதை

அம்பிலே ஒரு தவம்


அம்பிலே ஒரு தவமாய்
அன்பிலே எனை ஆண்டாய் !
பண்புடன் காதலிலே வென்றாய் !
கண்முன்னே நின்றாய் !
கவலைகள் மறந்திடச் செய்தாய் !
மெல்ல மெல்ல நெருங்கினாய் !


என்னுள்ளே நீ வந்தாய் !
ஏதேதோ சொன்னாய் !
வண்ணக் கனவுகளில்
நான் நின்றிடவும்
வளர்பிறையாய்ச் சிரித்தாய் !
மன்னவனே என்றாய் !
மனமெங்கும் நிறைந்தாய் !!!


பனிக்காலம் கொல்லுதடி !
இளமையினை இளமயிலே !
நொடிப் பொழுதும் எனை விட்டும்
நீங்காத வரம் பெறுவாய் !
மலர்வனமும் சுட்டெரிக்க
மதுரசத்தைப் பருகிடவும்
தணியாதோ என் தாபம் !!!

ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (22-Jun-17, 1:02 pm)
சேர்த்தது : sarabass
Tanglish : puthuk kavithai
பார்வை : 116

மேலே