அன்பின் விலை அறியாதவளே

அன்று என் வசமானாள் இன்று வதைக்கும் விஷமானாள்
அன்று எனக்கு அமிர்தமானாள் இன்று எரியும் அமிலமானாள்
என் இதய வீட்டில் உன்னை வைத்துப் பூஜித்தேன்
என் உயிரை விட உன்னை அதிகம் நேசித்தேன்
என் கனவைக் கலைத்தாயே என் கண்களில் நீரைக் குளமாய் நிறைத்தாயே
இறக்கும் வரை இருப்பேன் எனச் சொன்னாயடி
உயிருடன் எனை இன்று இறக்க வைத்துச் சென்றாயடி
அழகாய் இருப்பதாக நினைத்தாயா உன் தசை
அதனால் தான் உயிரோடு வைத்தாயா எனக்குச் சிதை
ஒரு நாள் உன் தசை நிலைமாறும் அன்று உன் திசை நிலை மாறும்
அன்று உணர்வாயாடி என் அன்பின் உண்மையான விலை

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (22-Jun-17, 11:56 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 541

மேலே