மழைத் திருவிழா

காய்ந்து போன மண்ணில்
முத்துக்களாய் சிந்தின மழைகள்
கும்மாளம் போட்டுக்கொண்டே குதித்தன

கூடவே
மின்விளக்காய் மின்னலும்
இன்னிசையாய் இடியும்
சேர்ந்து
விழாக்கோலம் பூண்டது
ஒவ்வொரு மின்னலிலும்
வானம் பிரகாசித்தன
பூமியே பிரசித்திப்பெற்றது
துவன்டுபோன மரங்களும்
உற்சாகத்தில் ஜொலித்தன
மாண்டும் நிலை செடிகளும்
பூக்களால் அலங்கரித்தன பூமியை
விழாக்கோலத்தில்
வீசிய காற்றில்
செடிகள்
சின்னஞ்சிறு மழலையாய்
நடனமாடின
மரங்களும் குத்தாட்டம் போட்டன
பறவைகளும் கூட்டமாய் பறந்தன
விலங்குகளும் குளியல் குளித்தன
இந்த உலகமே திருவிழாவாக
அலங்கரித்தன
அழகோ ஆயிரமடங்கு அதிகரித்தன....
ஆனால்
ஏனோ தெரியவில்லை
மனிதன் மட்டுமே ஒளிந்துகொண்டான்
மனிதனின் வெறுப்புகளால்
நின்றுவிட்டன மழை
இறந்தது தாவரங்களும்
பூமியின் சந்தோஷமும்

நனைந்துக் கொண்டே
வரவேற்ப்போம் மழையை
நேசித்து கொண்டே
பசுமையாக்குவோம் பூமியை....

எழுதியவர் : சக்திவேல் (22-Jun-17, 7:19 pm)
சேர்த்தது : சக்திவேல் வீரா
Tanglish : malaith thiruvizaa
பார்வை : 120

மேலே