கண்ணனும் – கண்ணதாசனும்

(என்றும் சாகவரம் பெற்ற என் கவிஞனுக்கு)
24.06.2017

கண்ணனும் – கண்ணதாசனும் - (113)


1 கண்ணன் - தத்துவத்தின் ஆதி மூலம்
கண்ணதாசன் - தத்துவத்தில் வாழ்க்கையை சொன்னவன்

2 கண்ணன் - காதலின் சாராம்சம்
கண்ணதாசன் - காதல் லீலைகளை லாவகமாக கையாண்டவன்

3 கண்ணன் - காதலின் மூலம் வாழ்க்கையை காட்டியவன்
கண்ணதாசன் - வாழ்க்கையே காதல் என்றவன்

4 கண்ணன் - துயரத்தில் தன்னை நினைத்தால் மன ஆறுதல் தருபவன்
கண்ணதாசன் - துயரம் வரும் பொழுது தன் பாடல்களால்
அரவணைத்தவன்

5 கண்ணன் - குழைந்தை வடிவில் நம் மனதை கொள்ளை கொண்டவன்
கண்ணதாசன் - தாலாட்டுப் பாடல்களில் நம் மனதை வருடியவன்

6 கண்ணன் - தானே வாழ்க்கை என்றவன்
கண்ணதாசன் - தன் வாழ்க்கையையே மற்றவருக்கு பாடமாக ஆக்கியவன்

7 கண்ணன் - கண்ணதாசனை உலகுக்கு கொடுத்தவன்
கண்ணதாசன் - கண்ணனுக்காகவே கிருஷ்ண கானம் எழுதியவன்

8 கண்ணன் - தன் படைப்பே உலகம் என்றவன்
கண்ணதாசன் - உலகத்தையே தன் படைப்பால் வென்றவன்

9 கண்ணன் - கீதையை கொடுத்தவன்
கண்ணதாசன் - அர்த்தமுள்ள இந்து மதம் தந்தவன்

10 கண்ணன் - எட்டாவது பிள்ளை
கண்ணதாசன் - இவனும் பெற்றோர்ரக்கு எட்டாவது பிள்ளை

11 கண்ணன் - இவன் தத்துப் பிள்ளை
கண்ணதாசன் - இவனும் சுவீகாரப் பிள்ளை

12 கண்ணன் - இவனை சுற்றி கோபியர்கள் உண்டு
கண்ணதாசன் - இவன் சுற்றாத பெண்கள் இல்லை

13 கண்ணன் - இருவருக்கு தன் வாழ்வில் இடம் கொடுத்தவன்
கண்ணதாசன் - மூவரை தன் வாழ்க்கையில் இனைத்தவன்

14 கண்ணன் - எல்லோருக்கும் நம்பகமானவன்
கண்ணதாசன் - எல்லாரையும் எளிதாக நம்பியவன்

15 கண்ணன் - சகலமும் அறிந்தவன்
கண்ணதாசன் - சகலத்தையும் தன் எழுத்தின் மூலம் சொன்னவன்

16 கண்ணன் - அவன் இன்றி ஓர் அனுவும் அசையாது
கண்ணதாசன் - இவன் எழுத்தின்றி தமிழ் மொழியும் முழுமையாகாது

17 கண்ணன் - இவனை வணங்கினால் உள்ளம் உருகும்
கண்ணதாசன் - இவன் வரிகளைப் படித்தால் உணர்ச்சி ததும்பும்

18 கண்ணன் - உறவுகளின் மகிமையை சொன்னவன்
கண்ணதாசன் - உறவுகளின் உள் அர்த்தத்தை சொன்னவன்

19 கண்ணன் - வாழ்க்கை நெறியை சொன்னவன்
கண்ணதாசன் - அதை பாமரனுக்கும் புரிய வைத்தவன்

20 கண்ணன் - காதலுக்கு இலக்கணம் சொன்னவன்
கண்ணதாசன் - காதலில் இலக்கியத்தை புகுத்தியவன்

21 கண்ணன் - பரிசுத்த நட்பை காட்டியவன்
கண்ணதாசன் - நட்பின் ஆழத்தை சொன்னவன்

22 கண்ணன் - பகைவர்களே இல்லாதவன்
கண்ணதாசன் - பகைவர்களுக்கும் நட்புக்கரம் நீட்டியவன்

23 கண்ணன் - புகழ்ச்சியும்,இகழ்ச்சியும் நானே என்றவன்
கண்ணதாசன் - போற்றலும் தூற்றலும் கண்ணனுக்கே என்று சொன்னவன்

24 கண்ணன் - கடவுளை நம்பாதவனையும் தன்னுடன் சேர்த்துக்
கொண்டவன்
கண்ணதாசன் - இவன் அதன் மூலம் கிடைத்தவன்

25 கண்ணன் - பல அவதாரங்கள் எடுத்தவன்
கண்ணதாசன் - ஒவ்வொரு அவதாரத்திலும் அவனைப் பாடியவன்

26 கண்ணன் - போதனைக்கு சொந்தக்காரன்
கண்ணதாசன் - இவன் தொழிலும் அதுவே

27 கண்ணன் - கூடா சேர்க்கை தவிர்க்கச் சொன்னவன்
கண்ணதாசன் - அதிலே மூழ்கி எழந்தவன்

28 கண்ணன் - அனுபவத்தின் மறுபெயர்
கண்ணதாசன் - அதை அழகாக தன் வரிகளில் சொன்னவன்

29 கண்ணன் - மனித வாழ்க்கையை கணித்தவன்
கண்ணதாசன் - அதை அலசி ஆராய்ந்து அர்த்தம் கண்டவன்

30 கண்ணன் - மனித வாழ்வின் நீளத்தை அறிந்தவன்
கண்ணதாசன் - அதை அறிய முற்பட்டு சமாதானம் ஆனவன்

31 கண்ணன் - மரணத்தின் மர்மத்தை நன்கு உணர்ந்தவன்
கண்ணதாசன் - தனக்கு மரணமே இல்லை என ஆனித்தரமாக நம்பியவன்

32 கண்ணன் - ஜன்ம ஜன்மதிற்கும் நம்முடன் இருப்பவன்
கண்ணதாசன் - தமிழ்மொழி நிலைக்கும் வரை நம்முடன் உலா வருபவன்

33 கண்ணன் - இவன் உபதேசம் போதை தரும்
கண்ணதாசன் - போதை நிலையிலே உபதேசம் சொன்னவன்

34 கண்ணன் - தெய்வீக அழகு கலை கட்டும்
கண்ணதாசன் - ஆன்ம அழகிற்கு சொந்தக்காரன்

35 கண்ணன் - கருமை நிறத்துக்கு சொந்தக்காரன்
கண்ணதாசன் - பெண்ணாக மாறி "கருமை நிற கண்ணா" என்று
கதறியவன்

36 கண்ணன் - மகாபாரதத்தின் நாயகன்
கண்ணதாசன் - பாரதத் தாயின் தவப்புதல்வன்

37 கண்ணன் - எல்லாம் அறிந்தும் சாதாரணமாய் தோன்றியவன்
கண்ணதாசன் - அதீத திறமையிருந்தும் எளிய வாழ்க்கை வாழ்ந்தவன்

38 கண்ணன் - புல்லாங்குழலில் மயக்கியவன்
கண்ணதாசன் - தன் பாடல்களின் மூலம் தன்னிலை மறக்கச் செய்தவன்

39 கண்ணன் - எந்த நிலையிலும் இவன் நம் பக்கம்
கண்ணதாசன் - எந்த சூழ்நிலையிலும் இவன் பாட்டு நம் கைவசம்

40 கண்ணன் - மானிட வாழ்க்கையை அலசியவன்
கண்ணதாசன் - தெய்வப் பிறவியை அலசியவன்

41 கண்ணன் - சிருஷ்டியின் கர்த்தா
கண்ணதாசன் - சிருஷ்டியின் மூலத்தை கண்டு வியந்தவன்

42 கண்ணன் - கேட்டதை கொடுப்பவன்...
கண்ணதாசன் - இருந்ததை கொடுத்தவன்

43 கண்ணன் - தன் வாததத்தால் அணைவரையும் மயக்கியவன்
கண்ணதாசன் - தன் சாதுர்யத்தால் ஆண்டவனையே மடக்கியவன்

44 கண்ணன் - எதற்கும் ஆசைப்படாதே என்றவன்
கண்ணதாசன் - ஆசையின் முடிவு அழிவுதான் என்று உணர்த்தியவன்

45 கண்ணன் - காதலும் வாழ்க்கையின் ஒர் அங்கம் என்றவன்
கண்ணதாசன் - தூய காதலுக்கு விளக்கம் சொன்னவன்

46 கண்ணன் - காதல் தோல்வி என்ற பேச்சிற்கே இடமில்லை
கண்ணதாசன் - காதல் தோல்விக்காக கடவுளை சாடியவன்

47. கண்ணன் - வாழ்க்கையின் அடுத்த நொடியின் ரகசியத்தை
அறிந்தவன்
கண்ணதாசன் - அதை புரிந்து தகுந்த விளக்கம் கொடுத்தவன்

48. கண்ணன் - ஜென்ம ஜென்மத்திற்கும் கண்ணனாகவே இருப்பவன்
கண்ணதாசன் - ஒவ்வொரு ஜென்மத்திலும் தான் யார் என்பதை அறிய
முற்பட்டவன்

49. கண்ணன் - நல்லவர்களை சோதிப்பவன்
கண்ணதாசன் - சோதனைகளிலிருந்து மீண்டு நல்லவனாக ஆனவன்

50. கண்ணன் - பலவிதமான மனிதர்களை படைத்தவன்
கண்ணதாசன் - பலவிதமான பாத்திரங்களில் கண்ணனை பாடியவன்

51. கண்ணன் - இல்லை என்போருக்கு வாரி இறைத்தவன்
கண்ணதாசன் - வேண்டும் என்போருக்கு தமிழால் அளந்தவன்

52. கண்ணன் - வாழ்க்கை இவனிடம் தொடக்கம்
கண்ணதாசன் - வாழ்க்கை இவன் வரிகளில் அடக்கம்

53. கண்ணன் - எங்கும் இருப்பவன்
கண்ணதாசன் - தமிழ் மொழியில் கலந்தவன்

54. கண்ணன் - விளையாட்டுப் பிள்ளை
கண்ணதாசன் - தமிழோடு விளையாடிய பிள்ளை

55. கண்ணன் - ஆயர் பாடியின் நாயகன்
கண்ணதாசன் - சிறுகூடற்பட்டியின் செல்ல மகன்

56. கண்ணன் - இவன் கண்ணை மூடினால் அகிலமே உறங்கும்
கண்ணதாசன் - இவன் கண்ணை மூடினால் தமிழ் அருவி கொட்டும்

57. கண்ணன் - சாகசக்காரன்
கண்ணதாசன் - சாகசம் அறியாதவன்

58. கண்ணன் - சாதுர்யமிக்கவன்
கண்ணதாசன் - சாதுர்யத்தை தமிழில் கலந்தவன்

59. கண்ணன் - ஆன்மீகத்தின் ஆதிமூலம்
கண்ணதாசன் - ஆன்மீகக் கடலில் குளித்து சுகித்தவன்

60. கண்ணன் - தீராத விளையாட்டுப் பிள்ளை
கண்ணதாசன் - தமிழ் தாயின் விளையாட்டுப் பிள்ளை

61. கண்ணன் - கவலை அறியாதவன்
கண்ணதாசன் - கவலை இல்லா மனிதன்

62. கண்ணன் - விஷமக்காரன்
கண்ணதாசன் - சில்மிஷக்காரன்

63. கண்ணன் - பாரத யுத்தத்தின் மூலகர்த்தா
கண்ணதாசன் - சமாதான விரும்பி

64. கண்ணன் - அனைவரின் மனதையும் அறிந்தவன்
கண்ணதாசன் - அனைவரின் மனம் ஏற்கும்படி சொற்களை கோர்த்தவன்

65. கண்ணன் - பல பெயர்களால் அறியப்பட்டவன்
கண்ணதாசன் - கண்ணனுக்கு தாசனாக மட்டுமே அறியப்பட்டவன்

66. கண்ணன் - எல்லாம் வல்லவன்
கண்ணதாசன் - சகலமும் அறிந்தவன்

67. கண்ணன் - இவனுக்கு நிகர் இவனே
கண்ணதாசன் - கவிஞர்களிடையே இவனுக்கு சமமாக யாரும் இல்லை

68. கண்ணன் - எங்கும் ஜீவிதம்
கண்ணதாசன் - அனைத்து மானிட உள்ளங்களிலும் சாம்ராஜ்யம்
செய்தவன்

69.கண்ணன் - எதற்கும் ஆசைப் படாதவன்
கண்ணதாசன் - ஆசையின் அளவுகோலை கணக்கிட்டு சொன்னவன்

70. கண்ணன் - மானிடப் பிறவியின் நெறிமுறைகளை சொன்னவன்
கண்ணதாசன் - இறைவனுக்கு சமமாக அமர்ந்து கொண்டு வாழ்க்கையை
போதித்தவன்

71. கண்ணன் - கருனை ததும்பும் முகம்
கண்ணதாசன் - ஆன்மீகம் கொஞ்சும் முகம்

72. கண்ணன் - உள்ளத்தின் ஆழத்தை உணர்ந்தவன்
கண்ணதாசன் - உள்ளத்தை கொள்ளை கொள்ளும் தமிழை தந்தவன்

73. கண்ணன் - வாழ்க்கையின் உட்பொருளை சூட்சமமாக சொன்னவன்
கண்ணதாசன் - ஜனன மரணதிற்கு இடைப்பட்டதே வாழ்க்கை என்றவன்

74. கண்ணன் - உலகிற்கு உபதேசம் செய்தவன்
கண்ணதாசன் - மானிட இனத்திற்கு உபதேசம் செய்தவன்

75. கண்ணன் - தவறே செய்யாதவன்
கண்ணதாசன் - செய்த தவறை பகிங்கரமாக ஒப்புக் கொண்டவன்

76. கண்ணன் - பெண் இனத்தின் மானத்தை காத்தவன்
கண்ணதாசன் - பெண் இனத்திற்கென்றே சிறப்பான தத்துவத்தை
சொன்னவன்

77. கண்ணன் - பகையும், பாசமும் வெவ்வேறு என புரிய வைத்தவன்
கண்ணதாசன் - பகைவரையும் பாசத்தால் வெல்லலாம் என புரிய
வைத்தவன்

78. கண்ணன் - வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களே அனுபவம்
என்றவன்
கண்ணதாசன் - கடவுள் பக்தியே அனுபவத்தின் மூலதனம் என்றவன்

79. கண்ணன் - தன்னை நம்பியவருக்கு அடைக்கலம் கொடுத்தவன்
கண்ணதாசன் - தன்னை ஏசியவரையும் அரவனைத்தவன்

80. கண்ணன் - வெண்ணை திருடும் கள்வன்
கண்ணதாசன் - தன் கவித்துவத்தால் அனைவரின் உள்ளத்திலும்
வந்தமர்ந்த கள்வன்

81. கண்ணன் - கருவிற்கு உருவம் தந்த வித்தகன்
கண்ணதாசன் - அதற்கு தகுந்த விளக்கம் கொடுத்தவன்

82. கண்ணன் - சகல ஜீவராசிகளையும் சமமாகப் பார்ப்பவன்
கண்ணதாசன் - அனைத்து ஜீவராசிகளின் தன்மை பற்றியும் அலசி
ஆராயந்தவன்

83. கண்ணன் - சோதிப்பது அவன் பழக்கம்
கண்ணதாசன் - அதற்கு தமிழால் மருந்திடுவது இவன் வழக்கம்

84 கண்ணன் - மானிட வாழ்விற்கு இவன் பொறுப்பு
கண்ணதாசன் - இவன் வரிகளில் மானிட வாழ்வே ஜொலிக்கும்

85. கண்ணன் - இவன் சன்னதி முன் நின்றால் மெய் சிலிர்க்கும்
கண்ணதாசன் - இவன் பக்தி வரிகளை படித்தாலே மனபாரம் குறையும்

86. கண்ணன் - கிருஷ்ண அவதாரத்தின் மெய்பொருள்
கண்ணதாசன் - அனைத்தும் கிருஷ்ணார்ப்பனம் என்றவன்

87. கண்ணன் - இவனைப் பார்த்தாலே பரவசம்
கண்ணதாசன் - இவன் படைப்புக்களோ நமக்கு அதிரசம்

88. கண்தன் - பக்தனை என்றும் கைவிடமாட்டான்
கண்ணதாசன் - இவன் எழுத்துக்களை என்றும் நாம் கைவிடமாட்டோம்

89. கண்ணன் - தாய்மாமனே விரோதி
கண்ணதாசன் - இந்த உறவின் புனிதத்தைப் பற்றி சொன்னவன்

90. கண்ணன் - பந்தபாசத்தை துறக்கச் சொன்னவன்
கண்ணதாசன் - பந்தபாசத்தை அரவனைக்கச் சொன்னவன்

91. கண்ணன் - மரணத்தின் சூட்சுமத்தை அறிந்தவன்
கணரணதாசன் - மரணத்தின் சூட்சுமத்தை அறிய முற்பட்டவன்

92. கண்ணன் - நாளய பொழுதின் ரகசியத்தை உணர்தவன்
கண்ணதாசன் - நாளைய பொழுது இறைவனுக்கு சமர்ப்பித்தவன்

93. கண்ணன் - ராதையின் நாயகன்
கண்ணதாசன் - காதல் பெண்களின் பெருந்தலைவன்

94. கண்ணன் - கண்ணனுக்கு அன்று ஆண்டாள்
கண்ணதாசன் - கண்ணனுக்கு இன்று இவன்

95. கண்ணன் - இவனை உணர்ந்தவர்கள் ஏராளம் பேர்
கண்ணதாசன் - இவன் எழுத்தக்களை அறிந்தவர்கள் ஏராளம் பேர்

96. கண்ணன் - குருவாயூர் குழந்தையவன்
கண்ணதாசன் - குருவாயூருக்கு அனைவரையும் அழைத்தவன்

97. கண்ணன் - நான் என்ற அகந்தை வேண்டாம் என்றவன்
கண்ணதாசன் - அவரவரை அறிந்துகொள்ள வழி சொன்னவன்

98. கண்ணன் - விஸ்வரூப காட்சி தந்தவன்
கண்ணதாசன் - தமிழ் மக்களுக்கு விஸ்வரூபமாய் தெரிந்தவன்

99.கண்ணன் - வாழ்க்கையின் வழி காட்டி
கண்ணதாசன் - வாழ நினைத்தால் வாழலாம் என்றவன்

100. கண்ணன் - உலகத்தை தன் வாய்க்குள் அடக்கியவன்
கண்ணதாசன் - தன் எழுத்துக்களால் உலகையே வென்றவன்

101. கண்ணன் - ஆசையின் மீது மோகம் வேண்டாம் என்று சொன்னவன்
கண்ணதாசன் - ஆசைக்கு அடிமையாகாதே என்றவன்

102. கண்ணன் - இவன் இன்றி நாம் இல்லவே இல்லை
கண்ணதாசன் - இவன் எழுத்தின் பொருள் இன்றி நம் வாழ்க்கை இல்லை

103. கண்ணன் - கண்ணதாசனின் எழுத்திலே கட்டுண்டவன்
கண்ணதாசன் - தெய்வீக மார்க்கத்தில் கட்டுண்டவன்

104. கண்ணன் - மானிட வர்க்கத்தின் சூத்ரதாரி
கண்னதாசன் - இறையுலகத்தின் காவலாளி

105. கண்ணன் - கிருஷ்ண ஜெயந்தியின் நாயகன்
கண்ணதாசன் - இவன் பிறந்த தினம் தழிழ்த் தாயின் ஆனந்தம்

106. கண்ணன் - குறும்புத்தனத்தால் தன் தாயை மகிழ்வித்தவன்
கண்ணதாசன் - தன் அழகிய எழுத்தால் தமிழ் தாயை குளிர்வித்தவன்

107. கண்ணன் - இறைவனுக்கும் மனிதனுக்கும் பாலமாக இருப்பவன்
கண்ணதாசன் - ஆதலால் அவனுக்கு அடிமையானவன்

108. கண்ணன் - ஆன்மீகத்தின் ஆணிவேர்
கண்ணதாசன் - ஆன்மீகத்தின் மறு உருவம்

109. கண்ணன் - சகலருக்கும் படியளப்பவன்
கண்ணதாசன் - அனைவரின் தமிழ் பசியை போக்கியவன்

110. கண்ணன் - ஆலயங்களின் முகவரி
கண்ணதாசன் - ஆலய வழிபாட்டை விளக்கியவன்

111. கண்ணன் - ஒவ்வொரு துரும்புக்குள்ளும் உயிராய் இருப்பவன்
கண்ணதாசன் - கல்லையும் கடவுள் ஆக்கியவன்

112. கண்ணன் - இவன் ஒரு சாரதி
கண்ணதாசன் - தமிழ்த் தாய்க்கு இவனும் ஓர் சாரதி

113. கண்ணன் - கண்ணதாசனை புரிந்து கொண்டவன்
கண்ணதாசன் - கண்ணனிடம் அடைக்கலமானவன்


ஆனந்த் சுப்ரமணியம்
தேதி - 30.5.17. நேரம் - விடிகாலை - 1.04 மணி

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (24-Jun-17, 10:55 pm)
பார்வை : 332

மேலே