கம்மாங்கரையிலே
சுத்திச் சுத்திச் சும்மா சும்மா
கம்மாங் கரைக்கு வார புள்ள
பத்த வச்சு தவிக்க வச்சு
ஏங்க வச்சு போற புள்ள
மாமன் இங்க காதலிலே
மனசு எல்லாம் உம்மேல
தாமதங்கள் வேணான்டி
சம்மதத்தை தாயேன்டி
புத்தி கெட்டு பொழப்ப விட்டு
பொலம்பிக் கிட்டு நிற்கும் மச்சான்
வெத்து வேட்டு நீ யில்லையே
வேலைக்கு போயி வா மச்சான்
உன்ன விட தங்கமில்ல
என்னிதம் தந்து விட்டேன்
தாலிகட்டவே நாள்பாரு
வேண்டாமினி தகராறு
ஆகா ஆகா ஆனந்தமே
சிரிப்பு இனிமேல் என்சொந்தமே
மேகம் மேல பறக்கிறேனே
தூக்கம் மறந்தே கெடக்குறேனே
சந்தோசம் தானே என்மாமா
உனக்காகத் தானே நான்மாமா
செல்லக் கிறுக்கா தூங்கிப்புடு
என்னை வாழ்வெல்லாம் தாங்கிப்புடு