ஈகை பொன் திருநாள் -கங்கைமணி

ரமலான் நோம்பிருந்தோம்
நற்பயனை அடைந்தோம்.
கறைபடிந்த மனதை
கழுவித்தான் முடித்தோம்.
இல்லையெனச்சொல்லாது
இருந்தவற்றை கொடுத்தோம்.
பசியென்றால் என்ன
பாடத்தை படித்தோம்.
பசியாற உணவை
பகிர்ந்தெங்கும் கொடுத்தோம்.
எமை ஈன்ற இறைவா
உனைமட்டும் கதியாய்
உன் நினைவோடு நோம்பை
நிறைவோடு முடித்தோம்!.
உருவில்லா இறைவா
உளமார உருகி...,
உன் நிழல் தேடும் எம்மை.,
அன்போடு அனைத்து
ஆனந்தப்படுத்து!.
கொடுஞ்செயல்கள் கண்டு
மனமெல்லாம் நொந்து
மன்றாடி உம்முன்
யாசித்துக் கிடக்கும்
உயிரெல்லாம் காத்து
குறைபட்ட உலகை
நிறைவோடு மாத்து!!.
அனைவருக்கும் என் இனிய ரமலான் தின நல்வாழ்த்துக்கள் !!!!.
-கங்கைமணி