பணத்தின் மறுபக்கம்
ஆட்டி வைக்குது வேப்பிலையாய்
சாமி ஆடியபடிய மனிதகுலம்
மகுடி ஆகியது பணமெல்லாம்
அதன் போக்கிலாடும் பாம்பானோம்
ஒரு சிறிய காகிதம்தான்
மதிப்போ எங்கோ உச்சத்தில்
மனிதர் என்ற பெயர்பெற்றோம்
மதிப்பறிந்து நாம் நடக்கிறோமா?
மேசைக்கு கீழே வந்தபணம்
எவரோ உழைந்த சொந்தபணம்
ஊழலில் மாட்டி நொந்தபணம்
பதுக்கப்பட்டது இன்றோ கிழிக்கப்பட்டது
புதிய பணம் வரும்முன்னே
அதன் போலிப்பணம் புலக்கத்திலே
மனிதன் மனம் பேதலித்தான்
படைத்த கடவுள் கலக்கத்திலே
கடவுளுக்கும் இவன் விலைவைத்தான்
பணமென்றால் இங்கே இதயம்விற்றான்
உதவ வந்ததாய் நுழைந்தபணமே
இன்று உலகை ஆளுது