பெண்ணென்று பிறந்தது மேன்மையே
பெண்ணென்று பிறந்தது மேன்மையே
இதிலேதும் இல்லை தாழ்மையே
சக்தி மிக கொண்டதெங்கள் பெண்களம்மா
புத்தி மிக அதிகம்கொண்ட ஜீவனம்மா
பயப்படும்படிக்கா கடவுள் படைத்துவிட்டான்
பலமான இதயமல்ல அவன் தந்துவிட்டான்
எதையும் தாங்கும் இனம் பெண்ணினமே
பெண்ணினம இல்லையெனில் உலகே வெற்றிடமே
யாரையும் பெண்கள் நம்பிட வேண்டாம்
தன்னை மட்டுமாவது முழுதாய் நம்பிடவேண்டும்
தன்னம்பிக்கை எனும் "கை" துணையிருக்கும்போது
விண்ணும் பக்கமே வாழ்க்கை சொர்க்கமே
எத்தனை கஷ்டங்கள் எதிரே வந்தாலும்
எதிர்த்து நின்றிட வேண்டும் தன்னம்பிக்கை
அத்தனை கஷ்டமும் மறைந்தே போய்விடும்
அடுத்த நாட்களோ மகிழ்ச்சி பொங்கிடும்