சாக்கடைப் பூக்கள்
சாக்கடையில் விழுந்த பூக்கள்
வீச்சம் பழகின; கூச்சம் பழகின
கோர்க்கப் படுவதுமில்லை,
சேர்க்கப் படுவதுமில்லை
சிதைந்து நசுங்கிச்
சின்னா பின்னந்தான்.
மணக்கவுமில்லை
மாலையாகவும் இல்லை.
இருந்த பெருமையை
இழந்த வாழ்க்கை.
சூடிய புகழை
மூடிய சேர்க்கை.
பரிதாபமோ? பச்சாதபமோ?
என்ன செய்துவிட முடியும்?