மன்னும் இமயமலை எங்கள் மலையே - செஞ்சுருட்டி

மன்னும் இமயமலை எங்கள் மலையே என்ற பாரதியார் பாடலை S.V.வெங்கட்ராமன் இசையமைப்பில் M.S.சுப்புலட்சுமி பாடியிருக்கிறார்.

மன்னும் இமயமலை எங்கள் மலையே;
மாநிலமீததுபோல் பிறிதில்லையே!

இன்நறு நீர் கங்கை ஆறு எங்கள் ஆறே;
இங்கிதன் மாண்பிற்கு எதிர் ஏது வேறே?

பன்னரும் உபநிட நூல்எங்கள் நூலே;
பார்மிசை ஏதொரு நூலிது போலே!

பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே;
போற்றுவம் இதை எமக்கில்லை ஈடே!

மாரத வீரர் மலிந்த நன் நாடு;
மாமுனிவோர் பலர் வாழ்ந்த பொன் நாடு!

நாரத கான நலம் திகழ் நாடு;
நல்லன யாவையும் நாடுறு நாடு!

பூரண ஞானம் பொலிந்த நன் நாடு;
புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு!

பாரத நாடு பழம்பெரும் நாடே;
பாடுவம் இதை எமக்கில்லை ஈடே! - பாரதியார் பாடல்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Jun-17, 1:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 3417

மேலே