நட்புடன் முதுமைக் காதல்
தண்ணீர் வற்றி விரிசல் விட்ட விலை நிலமாக
இருக்கும் அவள் சுறுக்கம் விழுந்தக் கன்னத்தில். பற்க்கள் இல்லாமல் நமட்டையில் தந்த "முத்த" மழையில் நனைகின்றதாம் அவள் வாழ்க்கை!
அவனுக்கும் இன்றும் அது அன்று தந்த இளமை முத்தமாகவே
இனிக்கின்றதாம்!
தங்களின் நினைவுகளை அசைப்போடும் ஒவ்வொரு இரவுகளும் நீண்டதாம்!
செவிகள் செயல் இழந்த அவர்களுக்கு செய்கையில் புது மொழிப் பிறந்ததாம்!
குருதிகள் வற்றிய தேகத்தில் அன்பும்,பாசமும் வற்றாதக் கடலாம்!
அவள் பெயரை "செதுக்கிய" அவன் மார்பும்!
அவன் பெயரை "செதுக்கிய" அவள் கைகளும்
சுறுங்கிக் கிடந்ததாம்!
அவர்களின் அன்பு மட்டும் பெருகிக் கிடந்ததாம்!
கண்களில் ஒளி உள்ளவரை!
இதயத்தில் துடிப்பு உள்ளவரை!
இருவரின் அன்பும் தொடருமாம் மரணம் வரை!
அந்த மரணம் வந்து முற்றுப் புள்ளி வைக்கும் வரை!
~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார்