அம்மா

மழலை பிள்ளை நான்-உன்
மடியில் தவழுகையில் -மறு
ஜென்மம் எடுத்தது போல்
மனம் மகிழ்ந்து சிரித்திருப்பாய்...
தடுக்கி நானும் விழ-மனம்
தவித்து உழன்றிருப்பாய்...
பள்ளி செல்ல மகன்
மறுத்துக் கதறுகையில்
பொறுத்து நிற்பாயோ
பொன்னே குல மகளே...
உன்னை நினைக்க மனம்
மறந்து போய் விடினும்
மறக்க நினையாது
மண்ணின் மணி விளக்கே......