தாய்மை
தாய்மையின் அழகு பாசம்
தாய்மை இல்லை எனின்
உயிர்களுக்கு எது ஆறுதல்
பாசத்தின் உணர்வை கதி என இருந்து
துணைவருக்கு நிழலாக மாறி
அவரின் சந்ததியை பரப்பிவிட
தன் கருவில் இன்னொரு உயிரை தாங்கி
பத்து மாதம் வலி தன்னை பொறுத்து
பிள்ளை தன்னை பிறக்க வைப்பதால்
பெண் அவளும் தாய்மையின்
அழகு பெறுகிறாள்
தன் உயிர் போல எண்ணி
பிறந்த குழந்தையை
காவல் காத்து இருப்பாள்
எந்த வேலையில் என்ன குழந்தையின்
சிணுங்கல் சத்தம் வந்தால்
சினம் கொள்ளாது துள்ளி எழுந்துடுவாள்
தாய்மையை தன்னிறைவானது
தனி தன்மையானது
தன் சுதந்திரம் பறி போனதை
எண்ணி ஒரு போதும் கண்கலங்காது உயிர்
தன் பிள்ளை வளர்ந்து...உயர்ந்திட
தினமும் உழைப்பது தாய்மை துணையனையும்
நெஞ்சில் சுமந்து அவரின் கனவுகளை
வென்று விட துணை இருப்பவள் தாய்மை
இயலாமையினால் முதியோர்
இல்லத்தில் சேர்த்தாலும் கோவம் கொள்ளாது
தன்னில் செரித்து கொள்ளும் தாய்மை