பாவம் ஆதவன்
ஓய்வின்றி வந்த நாள் முதல்
இந்த நாள்வரை சுழன்று
ஓய்வின்றி சுழன்று கொண்டே
இருக்கும் கதிரவன் நமக்கு
இரவும், பகலும் தருகின்றான்
காலையில் அவன் இளங் கிரணங்கள்
தாமரை மொட்டுகளை தடவி
அலர்ந்திடச் செய்யும் -நம் மனதிற்கு
உற்சாகம் தந்து நாளெல்லாம் உய்விக்கும்
ரவியவன் கிரணங்கள் விண்ணில்
பதியவில்லை எனில் பூமிக்கு வாழ்வில்லை
அசைவேதும் இல்லை
ஆதவன் உச்சிக்கு வந்துவிட்டால்
சுட்டெரிக்கும் தான் அவன் கிரணங்கள்
சுட்டெரிக்கும் கிரணங்கள் நமக்கு
தேவையில்லா அத்தனை கிருமிகளை
சுட்டெரித்து பொசிக்கிவிடும் நம்மை
நலம்பெற வாழ வழி வகுக்கும்
கடல் நீரும் மாறி மழையாய் பொழிந்திட
ஆதவன்.........................அந்த இரவில்
உலாவும் சந்திரனுக்கு ஒளி தந்து
அவன் கிரணங்கள் குளிர்ந்து
நமக்கு தன்னொளி தருவதும் ஆதவனாலே !
அத்தனையும் தந்த போதிலும் அந்த
சூரியனை சற்றே சில மாதங்கள்
கோடையில் அவன் கிரணங்கள்
உக்கிரம் ஆகி வர்த்திட்டால்-அவன்
செய்யும் நன்மைகள் அத்தனையும்
மறந்துவிட்டு நாம் அவனை
வசை மாறி வைதலும் உண்டு
இரவல் ஒளிகொண்டு ஆதவன் ஒளியில்
இரவில் தன்னொளி தந்து
நிலவு , என்றும் குழந்தைக்கும்
இளங் காதலர்க்கும் வற்றா உறவு
மனிதன் புகழ்ச்சிக்கு என்றும் பாத்திரம்
பாவம் கதிரவன் அத்தனையும்
தந்து நம்மை வாழவைத்த போதிலும்
கொடுப்பதில் காலம் தாழ்த்தி விட்டால்
வசைமொழி தான் அவனுக்கு அர்ச்சனை
கொடுத்துக்கொண்டே இருந்தால்
மனிதன் நன்றி சொல்வான்
கொடுக்க மறந்தால் கொடுத்ததை
மறந்து விடுவான்
இரவலில் ஜொலிப்போரை போற்றுவர்
கதிரவன் தந்த ஒளியில் மிதக்கும் நிலவொப்ப
என்னே உலகம்

