புகைப்படம்

பிறந்தநாள் தினத்தன்று
பிங்க் நிற பின்புலத்தில்
பிரியமான தோழியருடன்

நிழற்படம் எடுத்த நிகழ்வு
நீங்காது இருக்குதடி
நினைவில் இன்னமும்

இன்று இந்த இனிய தினத்தில்
இன்னுமோர் வாய்ப்புதானடி
இருவரும் இனைந்து இருந்திட

நீல நிற பின்புல திரை விரித்து
பாலினில் பக்குவமாய் கேக் சமைத்து
மின்மினி பூக்களால் அழகு மிகையூட்டி

வைகறை வானத்தில் நின்று
நீ வரும் கணம் எதிர்நோக்கி
யாவரும் காத்திருக்கிறோம்

மேல்மாடம் வந்து சேரடி
நீல வான மேடையில்
கூடி நின்று எடுத்திடலாம்
புகைப்படம்

எழுதியவர் : (1-Jul-17, 7:43 pm)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : pukaipadam
பார்வை : 175

மேலே