கதை
அழகான_காதல்_இரவு
பையன் : குட் நைட் டா..
பொண்ணு : நான் குட் நைட் சொல்ல மாட்டேன்டா, எனக்கு தூக்கம் வரல, என்னை தூங்க வைக்க ஏதாவது பண்ணு.. பையன் : சரி, தூங்க வைக்கிறேன், இது ஒரு மனசால வர்ற பீலீங்ஸ் வித்தியாசமா இருக்கும்.. இதை நான் சொல்லி முடிக்கும் போது உன் மனசுல அந்த பீலீங்ஸ் வரும் தூக்கமும் கண்டிப்பா வரும்... நீ ரெடியா? பொண்ணு : என்ன மனசால வர்ற பீலீங்ஸா? சரிடா நான் ரெடி, சொல்லு என்ன...
பையன்: சரி சொல்றேன், இப்ப நான் உன் பக்கத்துல இருந்தா என்ன செய்வ?.. பொண்ணு : டேய் இது என்ன கேள்வி? இது எதுக்கு இப்போ?
பையன்: கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு, நீ சொல்லிட்டு, அப்புறம் இதே கேள்வியே என்கிட்ட கேளு...
பொண்ணு : ஏதாவது பேசுவேன், ஐாலியா கிண்டல் பண்ணிட்டு, அவ்வளவுதான்.. ஆனா நீ நினைக்கற மாதிரி நான் கண்டிப்பா எதுவும் செய்யமாட்டேன், தொடுறது, கிஸ் பண்றதுனு.. நான் விலகி தள்ளிதான் இருப்பேன்.. சரிடா, நீ சொல்லு.. நான் உன் பக்கத்துல இப்ப இருந்தா என்ன செய்வ? தப்பா ஏதாவது சொன்ன அவ்வளவுதான்.. பேசவே மாட்டேன்..
பையன் : சொல்றேன், கவனமா கேளு.. உன்னை நிறைய மனசு விட்டு பேசவிடுவேன், இதுவரைக்கும் நீ ஒரு பொண்ணா பட்ட கஷ்டம் வலி எல்லாம் கேட்டுதெரிஞ்சுப்பேன்.. நீ சின்ன வயசுல இருந்து இது வரைக்கும் உன் லைப்ல ரொம்ப அதிகமா எதிர்பார்த்து மிஸ் பண்ண ஆசைகள் கேட்டு தெரிஞ்சிப்பேன், எதனால மிஸ் பண்ண அப்படினு கேட்டு உன்னை சொல்ல வச்சு அதையும் தெரிஞ்சிப்பேன்.. உன் லைப்ல உன் மனச ரொம்ப காயப்படுத்தின விஷயம் என்ன அப்படினு இது வரைக்கும் நீ யாருக்கும் சொல்லாத அந்த வலியே உன்னை மனசால நீயே என்கிட்ட நம்பிக்கையோட சொல்ற அளவுக்கு வைப்பேன்.. நீ அதை எல்லாம் சொல்லி முடிக்கும்போது உன் கண்ணுல கண்டிப்பா கண்ணீர் வரும்... அப்ப அந்த நேரம் அந்த நொடி உன்னை என் மகளா நினைச்சு உன் அம்மாவா நான் இருந்து உன்னை என் மடியில தூங்க வைப்பேன்.. இது தான் தன்னை விரும்புற பொண்ணுக்கு ஒரு காதலன் தர்ற தாய்மை உணர்வு... அதை நான் உனக்கு தருவேன், இப்ப மட்டு்ம் இல்ல நான் வாழ்ற வாழ்க்கையின் கடைசி நொடி வரைக்கும் தருவேன்.. உன் மறுதாய் உருவமா நா இருப்பேன் உன்னை என் மகளா நான் தூங்க வைப்பேன்.. இப்ப நீ தூங்கு, உன் பக்கத்துல உன்னை இனி பாத்துக்க போற உன் தாய் உன்கூடவே இருக்கறதா மனசல நினைச்சு நிம்மதியா தூங்கு.. உனக்கான_என்காதலில்_ஒருதாயாய்.. #ஒருதந்தையாய்_ஒருசகோதரனாய் #எல்லாவறையும்_விட_உனக்கு #ஒருசிறந்த_நண்பனாய்_நானிருப்பேன்...