என் உயிர் மெய்காப்பாளன்
வயதிலே நான் பெரியவன் அவ்வளவே; அவள் என்னிலும் சிரியவள்
அவ்வளவே;
தகுதியில் அவளுக்கு நிகர்
நான் ;
எனக்கு நிகர் அவள்;
இங்கு சாதி மதம் மோதல் இல்லை;
உயர்வு தாழ்வு வியாதி இல்லை ;
ஒரே ஒரு வித்தியாசம் உண்டு;
அவள் பெண்ணினம்; நான்
ஆணினம் அவ்வளவே ;
ஒரு ஆணுக்கு ஒரு பெண் தரும் மரியாதையை எனக்கு தருகிறாள் ;
அவ்வண்ணமே ஒரு பெண்ணுக்கு
ஒரு ஆண் தரும் மரியாதையை அவளுக்கு நான் தருகிறேன்;
ஒருவருக்கு ஒருவர் பெருமை
அடித்துக் கொள்வதில்லை;
நான் தினக்கூலிக்காரன்;
அவள்அரசாங்க அலுவலகத்தில் எழுத்தியாக பணிபுரிகிறாள்;
உங்க ரெண்டுபேரோட இணைப்பு பார்க்கிறதுக்கு ஏணிவெச்சா கூட எட்டாது ஆனாலும் உங்களுக்கு எட்டிடுச்சே அதுதான் எப்படின்னு உங்களுக்கு கேட்க தோணுதுன்னு நெனைக்கிறேன் அதை நானே சொல்றதைவிட அதுல சம்மந்தப்பட்டவங்க சொன்னா சுவாரசியமாக இருக்கும் •••சொல்லுமா••••
சொல்லப்போறதுக்கு முன்னதாக நான் கேட்டுகிறது என்னன்னா நான் அரசாங்க அலுவலகத்தில வேல பாக்கிறவ அதனால என்னோட பெயரையோ புகைபடத்தையோ பயன்படுத்தக்கூடாது என்ன போடமாட்டீங்கன்னு நம்பறேன் அதனால சொல்றேன்•••
எனக்கு அம்மா அப்பான்னு சொல்லிக்க யாரும் கிடையாது எல்லாம் எனக்கு என் தாய்மாமன்தான் இப்போ செய்யிற வேலைக்கு முயற்சி எடுத்துக்கிட்டவரும் அவர்தான் ஆனா அவருக்கும் மனைவி காலமாயிட்டாங்க இரண்டே இரண்டு பொட்டப் புள்ளைங்கமட்டும்தான் அவுங்க கூட நானும் ஒருத்தி
ஆம்பளப்புள்ள கெடையாது
சந்தோஷமாத்தான் இருந்தது இரண்டு பொண்ணுங்களும் என்னைவிட வயசில பெரியவங்க சீக்கிரமா கல்யாணம் ஆயி மூனு நாலு வருஷம் ஆயிடுச்சி நான்மட்டும்தான் பாக்கி அதாவது தாய்மாமன் இருந்த பணத்துல இரண்டு பொண்ணையும் ஒப்பேத்திட்டாரு அதனால என் சம்பளத்த வீண் செலவு பண்ணாம வங்கியில என்பேர்லேயே போட்டு வச்சிருக்காரு ஆனாலும் இடையில் தாய்மாமாவுக்கு நெஞ்சிவலி அட்மிட் பண்ணேன் டாடா காட்டிட்டார்
தனிமை ஆக்கப்பட்டேன் இரண்டு வீடு தள்ளி ஒரு கல்கட்டாக்காரன் வாடகைக்கு வந்தான் என் நிம்மதி போச்சி ஏன்னா இங்கேயிருந்து பொண்ணுங்கள கடத்தி போயி விக்கிறதா கேள்வி பட்டேன் அன்னையிலே இருந்து அவன பார்த்தாலே என்னையறியாம ஒரு பயம்
ஒரு நாள் எட்டுமணி அளவில வேலை முடிஞ்சி லோக்கல் ட்ரெயின புடிச்சி வீட்டுக்கு வர இருக்கையிலே அவன் கொடைய புடிச்சிக்கிட்டு நின்னுக்கிட்டு இருந்தான் அவன பார்த்ததும் என் உயிர் ஏங்கிட்ட இல்ல எக்கச்சக்கமான மழை
மழையில நனைஞ்சிக்கிட்டே கண்ணுமண்ணு தெரியாம நடந்தேன்
பின்னாலேயே வர ஆரம்பிச்சான் வேர வழிதெரியாம இவருக்கிட்டே போயி நின்னுக்கிட்டேன் விசயத்தையும் சொன்னேன் அவரு யாருக்கோ குரல் கொடுத்தார் நாலஞ்சி பேர் தடியும் கையுமா ஓடி வர்த பார்த்தவன் மறைஞ்ச எடம் தெரியல எனக்கு அன்னைக்கு கெடைச்சவர்தான் இவரு
ஆனாலும் தாய்மாமன் போட்டுவச்ச பணம் அப்படியே தான் இருக்கு ஒரு பைசா செலவு பண்ணாம இருக்கு எங்க கல்யாணம் செலவி ல்லா கல்யாணம் தான்
கூலிக்காரனோ குபேரனோ எல்லாம் வாழற வாழ்க்கையில இல்லை மனசுல இருக்கு மனசு ஒத்துப்போனா எல்லாம்
ஒத்துப்போனமாதிரிதான்
அன்னைக்கே முடிவு பண்ணிட்டேன் இவர்தான் என் உயிர் மெய்காப்பாளன்
கணவன்னு சொல்றதவிட இப்படி சொல்ல எனக்கு பிடிக்குது மீதிய அவருகிட்டே இருந்து தெரிஞ்சிக்க நெனைக்கிறீங்க என்கிறது புரியிது அவரையே கேளுங்க
எனக்கு சிலநாள் வேலை இருக்கும் சிலநாள் இருக்காது அதை அவள் பெரிதாக எண்ணுவதில்லை
பிள்ளை குட்டி எதுவும் இதுவரை இல்லையான்னு கேக்கப்போறீங்கன்னு நெனைக்கிறேன் அதைப்பத்தி இன்னையவரைக்கும் யோசிக்கவே இல்லைங்க
இரண்டும் இளசுங்க உங்களாள எப்படி இவ்வளவு கண்ட்ரோலா இருக்க முடியிது
அந்த ரகசியத்தை தெரிய விரும்புறீங்கன்னு நெனைக்கிறேன்
முயன்றால் முடியாதது ஒன்னுமே இல்லைங்கிறதில எங்க இரண்டு பேருக்குமே நம்பிக்கை இருக்குங்க அவ்வளவுதான் சொல்லமுடியும்
சிலவங்க இந்த கணவன் மனைவி ங்கிறத வியாபார நோக்கோடு பார்க்கிறாங்க பணம் காசு வருது நிம்மதி வருவதில்லை அதை எங்கேயோ தொலைச்சிட்டு விளக்கை ஏத்தி கையில புடிச்சிக்கிட்டு தேடோதேடுன்னு தேடுறாங்க கண்டுபுடிச்ச பாடில்லை
கொண்டுவந்தால் தான் மனைவி என்ற
நிலமை நிழலாடிக்கிட்டிருக்கு
இதுக்கு நாம கல்யாணம் பண்ணாமலே இருந்திருக்கலாம் என்ற தண்டவாளத்தில் தலைவைத்து படுக்கும் பல வண்டவாளங்கள்
எங்களைப்போன்று இனியும் இருப்பார்களா என்று சந்தேகமே
(மீண்டும் சந்திப்போம்)