கரை சேராத கனவுகள்

கரை சேராத கனவுகள்
*********
செப்பனிடப்படுகிறது
சிதைந்து போன கனவுகளின் மேலே
மறுபடியும் மறுபடியும்,

தாக்கங்களாயிரம்
தாவித்திரிகிறது மனசு
அங்கே கிளைகளில்லை,

வானம் அருகிலிருப்பதை காண்கிறேன்
சிறகுகள் உடைகிறது
இன்னும் முடியவில்லை பயணம்,

இழப்புக்களின் எண்ணிக்கை
அதிகரிக்கிறது -
கனத்த மனசோடு அழும் சத்தம்
காற்றின் காதுகளில் மட்டுமே,

ஒரு சொட்டு சுவாசத்தினை
கையில் பிடித்த படி காலம்
அதன் பின்னே எனது பயணம்,

பொழுதுகளை படித்ததில்
கலக்கப்பட்டிருந்த
வேதனையை கண்டறிந்தேன்,

தனிமை பிறப்பிக்கிறது
ஒரு வித உணர்வுகளை
யாருமற்ற தருணங்களில்,
வெடித்து விழும் பஞ்சு போல்
உடைகிறது மனசு,

எதையும் கொண்டுவராத என்னிடம்
இத்தனை கனவுகள்
எப்படி வந்தது,,,???

மறுபடியும் பிறக்க வேண்டும்
குஞ்சுகளை அடைகாக்கும்
பறவையாக,,,,,,,,,

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (3-Jul-17, 4:16 pm)
சேர்த்தது : ifanu
பார்வை : 374

மேலே