வெட்கம் தவிர வேற எதுவும் தரமாட்டாய்
அந்தி மாலை நேரம் !
ஜில்லென்று குளிர்மழை !
திறந்த ஜன்னல் வழியாய் குளிக்காற்று !
பார்த்துக்கொண்டே மிதமான தேனீர்
அருந்தியபடி நீ !
சப்தம் ஏதும் இன்றி மெல்லமாய் வந்து
இறுக்கம் ஏதும் இன்றி
இதமாய் உன்னை பின்னால் கட்டியணைத்து !
பின்கழுத்தில் இதமாய் முத்தமிட்டு
என் ஸ்பரிசத்தால் உன் தேகம்
சிலிர்த்தது பிடித்து இருக்கிறதா ?
ஜில்லென்ற குளிக்காற்றின் தீண்டலில்
தேகம் சிலிர்த்தது பிடித்து இருக்கிறதா ?
பதில் என்ன ?
"வெட்கம்" தவிர வேற எதுவும்
தரமாட்டாய் என எனக்கு தெரியும் !