நெஞ்ப்பொறுக்குதில்லையே
ஈழம் எனும் பெயா் கொண்ட சுடுகாட்டில் நடமாடும் பினங்களாய் நம் சொந்தம் அங்கு..!
இங்கோ எட்டு இட்டிலி கெட்டி சட்டினி என
தின்று விட்டு
ஈழத்திற்காய்
ஓர் நாள் பட்டினி
என நீலி கண்ணீா் விடும் அரசியல்வாதிகளும்.. அதனோடு கைகோா்த்து நிற்கும் கல்லூாி மாணவர்களும்... இதனை காணும்போது என் நெஞ்சுப்பொறுக்குதில்லையே..!
உன் வலைவு நெளிவுகளை ரசிக்க வந்த என் இனத்தை வாரி அனைத்துக்கொண்டாயே... உன் பாசத்தைக்கண்டு பதறிவிட்டேன்..! ஆழ் கடலில் தோன்றிய அகங்கார சுனாமியை நினைக்கும்போது என் நெஞ்சுப்பொறுக்குதில்லையே..!
மனிதா்கள் ஆடிய குத்தாட்டம் தாங்காமல்.. கோரத்தாண்டவம் ஆடிய பூமித்தாய்...
ஒன்றும் தெரியாத புழுக்களையும் புதைத்துக்கொண்டாளே.. அந்த பூகம்பத்தை நினைக்கும் போது
என் நெஞ்சுப்பொறுக்குதில்லையே..!
அக்னித்தாயே..!
நீ
ஆவேசம் கொண்டு
அழிக்க நினைத்தால்.. ஆணவம் கொண்ட அக்கிரமகாரர்களை அழித்திருக்கலாமே...
அப்பாவி
குழந்தைகள் மீது
உன் கோபம் காட்டினாயே..(கும்பகோணம் தீ விபத்து)
அதனை நினைக்கையில்
என் நெஞ்சுப்பொறுக்குதில்லையே..!
களவி இச்சைக்கு அடிபணிந்து..
சில காமூகர்களால் செய்யபடும்
கேடான செயலுக்கு
குப்பை தொட்டி தத்தெடுக்கும்
பிஞ்சு குழந்தைகளை காணும் போது
என் நெஞ்சுப்பொறுக்குதில்லையே..!
முயற்ச்சித்து முன்னேற நினைப்பவர்களை முடக்கிவிட்டு...
பணகட்டுக்காக முயலாதவனை முடுக்கிவிடும்...
சில நாதரி நாய்களை காணும்போது
என் நெஞ்சுப்பொறுக்குதில்லையே..!
நெஞ்சுப்பொறுக்குதில்லையே..!