உயிருக்குள் துடிக்கின்ற நம் காதல் 555

உயிரே...

என் மனதோடு
புதைந்த காதலை...

விழிவழியில் சொல்ல
நினைக்கையில்...

முன்பே என்னில் சுரந்துவிட்ட
கண்ணீரால் முடியாமல் போகுதடி...

உன்னை எதிரில்
பார்க்கும் போதெல்லாம்...

உன்னிடம் நான் நி
றைய பேசவேண்டும்...

ஒரே வார்த்தையில்
இன்றுவரை புரியவில்லை...

நமக்குள் இருக்கும் காதலை
சொல்ல தெரியாமல் நாம்...

சில நேரம் சொல்கிறது
உன் விழிகளின் ஈரம்...

காதலுக்கு முன்னால் நம்மில்
யார் கோழையென்று தெரியவில்லையடி...

அன்பே
நீயே சொல்லிவிடு...

உன் வெட்கத்தைவிட்டு
என்னிடம் காதலை...

நம் காதல் இனிதாக
தொடங்கட்டுமே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (5-Jul-17, 8:10 pm)
பார்வை : 233

மேலே