மாரடைப்பு

உன்னை தூக்கி வீசுகிறேன்
இதயம் எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கும் என்பது அறிந்ததால்
முன்னெச்சரிக்கையாக.
நீ வாழ வேண்டும் .....
ஆனாலோ அப்படி நினைத்த கணமே இதயம் வெடித்தது ...

நான் ஏன் உன்னை தூக்கி வீசுகிறேன்
என்பதை நீயும் அறிந்திருப்பாய் ...
ஏன் என்றால் இது நம் மகன்றிலின் செயல் அல்லவே என்பதால் ...
அவள் எமக்காக ஏதோ ஒன்றை மறைக்கிறாள் என்பதும்
அவள் உயிர் போனாலும் எம் மடியில் மரணம் வேண்டும் என்று தானே சொல்வாள் ...
அப்படியானால் இது எமக்கு ஏதேனும் ஆகி விடக் கூடாது என்பதின் வெளிப்பாடு

ஆம்
இது அவ்வெளிப்பாடே ...
உன்னை ஒரு நொடி கூட ஏமாற்றியதில்லை .
உன்னிடம் என்னை விட்டு போ என்று விளையாட்டிற்கு கூட எம்மால் சொல்ல இயலுமா என்ன ?
அந்த நொடிக்கு முன் செத்திருப்பேன்
என்பதே சரியான உண்மை .....

அப்படி இருந்தும் ஏன் இப்படி யோசித்தேன் என்றால்
எம் வலி உன்னை ஒன்றும் செய்துவிடக்கூடாது மாமா .....
இந்த மனமே இப்படித் தான் மாமா ...
விரும்பியவர்கள் நமக்காக அழுவதை நேசிக்கும் ...நேசித்த அடுத்த நொடி
அதே மனமே என் கணவருக்கு சோகம் வந்து தாக்கிவிடக்கூடாது என்று தன் வலியை மறைத்து ஒன்றும் இல்லைங்க என்று ஆறுதல் கூறி துடைத்து விட்டு புன்னகைக்கும் ...
எனக்காக நீ அழும்பொழுது எந்த அளவிற்கு மகிழ்ச்சியோ அதே போல் இதயத்தில் சிறிதாக எறும்பு கடிப்பது போல் வலிக்கும் மாமா ...எம் கணவர் அழுகிறாரே ...

நல்லது கெட்டது எல்லாவற்றிலும் உடன் இருப்பதும் அதை சேர்ந்தே அனுபவிப்பதும் ...
எதையும் மறைக்காமல் பரிமாறிக்கொள்வதும் உண்மையான அன்பு ...
உன்னிடம் சொல்லிடும் பொழுது அதையே நினைத்து நீ உன் நிம்மதியை இழந்து விடுவாயே என்ற நினைப்பு ...

எனக்கு நெஞ்சு வலி வரும் பொழுதெல்லாம் ...
நான் உன்னை கட்டி பிடித்துக்கொண்டேன் ...
காரணம் என் நெஞ்சம் உன்நெஞ்சத்தில் இறக்கட்டும்...

உன்னை நான் வேறாக நினைத்ததில்லை
நீயே தான் நான் ...
உன்னை மறுக்கிறேன் என்பது நான் இறந்துவிட்டேன் என்ற பொருள் .....

நான் ஏன் அப்படி கூற நினைத்தேன் ...
என்றால் நான் இல்லாமல் எப்படி நீ இருப்பாய் மாமா ...
ஒரு துண்டு எடுக்க கூட நான் உனக்கு வேண்டும் ...
உன் சந்தோசம் , துக்கம் ...
உன் சண்டை , தூக்கம் ...
உன் தோழி , உன் மனைவி , உன் தாய்
எல்லாமே உனக்கு நான் தானே ...

நான் இல்லாவிட்டாலும் நீ வாழ வேண்டும்
அதற்காக மனதை கல்லாக்கிக் கொண்டு
சொல்ல நினைக்கும் பொழுதே
இரண்டாவது முறையாக நெஞ்சுவலி மிகத் தீவிரமாக வந்துவிட்டது ...
இனி பிழைப்பது என்பது சாத்தியம் இல்லை ...


எம்மால் உன்னை எந்த காலத்திலும் தூக்கி வீச முடியாது என்பதே உண்மை ...
உன்னை ஒரு நொடி கூட நான் காயப்படுத்த மாட்டேன் ...
உனக்கு வலிக்குமே என் வலி என்பதால் சிரிக்கிறேன் நான் ...

எமக்காக நீ அழுவது என் வரம் ...
ஆனால் அதில் உமக்கு வலி கூடுமே என்பதில் என் வலியை மறைக்கிறேன் ...
ஆனாலும் என்னால் உன்னிடம் எதையும் மறைக்கவும் முடியாது ...உன்னை எந்நாளும் என்னால் மறக்கவும் முடியாது மாமா ,....
நீ இல்லா வாழ்க்கை கிடையவே கிடையாது ...ஏழேழு பிறவிக்கும் உன் மனைவியாக உன்னோடு எல்லாவற்றிலும் பங்கெடுத்து வாழ்வேன் ...
உன்னிடம் ஒன்றையும் மறைத்ததில்லை ...என் வலிகளையும் சேர்த்தே ...
மறைக்க நினைத்தால் என் மனமே என்னை கொன்றுவிடும் மாமா ...
என்று அவர் மடியில் முடிக்கும் பொழுது நெஞ்சு வலியால் ஒற்றை துளி கண்ணீர்
அதை துடைத்து விட்டு உனக்கு ஒன்றும் ஆக விடமாட்டேனடி ...
நீ இல்லாமல் நான் இருக்க மாட்டேன் ...
நீ எனக்கு என் வாழ்நாள் முழுக்க அதையும் தாண்டி எப்படியும்(எப்பயும் ) நீ எனக்கு வேணும் பிரபா ...
மண்ணிலேயும் விண்ணிலேயும் காற்றிலேயும் நீரிலேயும் நெருப்பிலேயும் நீ எங்கூட தான் இருப்ப
உன் உயிர் என்னுடையது ...எமனை உன்னுயிரை எடுக்க விடமாட்டேன் ...
எடுப்பதானாலும் இரண்டு உயிரையும் சேர்த்து தான் எமனால் எடுக்க முடியும் ...
உங்களிடம் இதையும் மறைக்கவில்லை என்ற நிம்மதி ...மனதை மகிழ்ச்சியாக்குகிறது மாமா ...நான் நிம்மதியாக இனி தூங்குவேன் ...
அவள் விரலை கோர்த்து வருடியபடி கூந்தலை கோதியபடி இருக்கையில்
மடியில் சொல்லிவிட்டேன் என்ற நிம்மதியோடு தூங்கி இருந்தாள்...
மடியில் இருந்து படுக்கையில் அவளை கிடத்தி விட்டு
குளியல் அறை சென்று ...
குளித்தபடி " கடவுளே என் உயிரை வேண்டுமானாலும் எடுத்துக் கோங்க ...அவளை என் கண் முன்னாலேயே நான் இருக்க கொன்றுவிடாதீர்கள், அவள் யாருக்கும் எந்த தீங்கும் செய்ததில்லையே ...ஏன் இவ்வளவு அவசரம் ...அவளை விட்டுவிடுங்கள் பதிலுக்கு என் உயிரை தருகிறேன் ...என்று அடக்கி வைத்திருந்த தன் கண்ணீரை நீரோடு கரைத்து விட்டு ...உடை மாற்றிக்கொண்டு அவள் அருகில் படுத்துக்கொண்டான் ...
இன்று என்னவோ அவனுக்கு தூக்கமே வரவில்லை ...கொஞ்ச நேரத்திற்கொருமுறை பிரபா எப்படி இருக்கிறாள் என்று பார்த்துக்கொண்டான் ...அவள் சுவாசிப்பதை அறிகிறான் ...நேரம் ஆக ஆக கண் தானாகவே அயர்ந்து போய் தூங்கிவிட்டான் .....
சிறிது நேரம் கழித்து அவளுக்கு மாரடைப்பு வந்துவிட கண் விழித்து கணவனையே பார்த்துக்கொண்டே ... அவர் விரலை வலியோடு பற்றிக்கொண்டு அவள் நெஞ்சை பிடித்தபடி அவர் நெற்றியில் முத்தமிட்டாள் ...அவர் மார்பில் அவள் உயிர் உடனே அடங்கியது .....
எழுந்து பார்க்கும் வேளை என்னவள் என் மார்பு கூட்டில் மூச்சின்றி இருப்பதை பார்த்த நொடியே இவன் உயிரும் அவள் நெஞ்சாங்கூட்டில் அடங்கியது ...
இரு நெஞ்சங்களும் கைகோர்த்து மேலே பறக்கிறது .....பிரிவென்பதே இல்லா இவர்கள் ஏழேழு சென்மம் சேர்ந்து வாழ்ந்து இன்று சேர்ந்து செல்கிறார்கள் விண்ணுலகில் சேர்ந்து வாழ ...
- சுபம் -

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (6-Jul-17, 7:45 am)
Tanglish : maaradaippu
பார்வை : 122

மேலே