உரிமைக்குரல்

திருடியவன்
திருடன்
என்றான்
திருட்டுக்கு
துணை நின்றவன்...!!

வங்கிகள்
வைப்பு
நிதிகள்
தனியார்
நிறுவனத்திற்கு
மட்டுமே...!!

மக்களின் - வரி
சுரண்டப்படுகிறது
தனியார் நிறுவனம்
உயர்த்தப்படுகிறது...!!

முதலீடுகள்
செய்ய
அழைக்கும்
இந்தியா
முதுகெலும்பை
தாரை வார்க்கிறது...!!

சட்டங்கள்
மக்களை
வஞ்சிக்கிறது
அரசியல்
ஏமாற்றுகிறது
வாக்குறுதிகளாக...!!

எல்லை
தாண்டிய
பேச்சுரிமை
பகையை வளர்க்கும்
போரையும்
உருவாக்கும்...!!

இந்திய
நாட்டிற்கு
நல்லதல்ல
இவை யாவும்
வளர்ச்சிப்
பாதைக்கு வழியுமல்ல...!!

ஊழல்
மிஞ்சிவிட்டது
மக்களின்
வாழ்வாதாரம்
மாறிவிட்டது
வரிகளின்
பெருக்கத்தால்...!!

உரிமைக்குரல்
வெற்றியின்
முதல் படி
போராட்டமே
வெற்றிப்படி...!!

எழுதியவர் : லத்தீப் (6-Jul-17, 3:53 pm)
சேர்த்தது : நாகூர் லெத்தீப்
பார்வை : 289

மேலே