நிலாவில் உலாவும் மான் விழியே
நிலாவில் உலாவும் மான் விழியே
சிறப்பு கண்ணதாசன் சான்றிதழ் ( 11 )
நிலாவில் உலாவும் மான் விழியே !
பலாச்சுளை போன்றே சுவைதரும் கனியே !
காதல் கனியே கவிதை மலரே .
மோதல் இனியே முற்றிலும் வேண்டா .
மலரே உனையே மணமுடை மலராய்ப்
பலநாள் உணர்வாய்ப் பசுமை நெஞ்சில்
இனிதாய் எழுதிட இயற்கை என்னுள்
கனிநிகர் அழகுக் கன்னி நீயே !
சிலையாய் நின்றுச் சிந்தைச் சிதைத்தாய் .
கலைகள் பலவும் கற்றவள் நீயே .
என்றும் உந்தன் நினைவினில் யானும்
உன்றன் பெயரை உள்ளம் எழுதும் .!
இதயக் கூட்டில் இருத்தி வைத்துக்
கதியே நீயெனக் காதல் மலர
விதியை எண்ணி வியக்கும் வேளைப்
பதியாய் எனையும் பதிப்பாய் மனதில் . !
காதல் நோய்க்குக் கன்னி நீதான்
சாதல் இல்லாச் சாகா மருந்து .
ஊடலும் காதலில் ஒருவகை அன்றோ ?
தேடலில் யானும் தேவதைக் கண்டேன் . !
வானில் பூத்த வட்ட நிலாவே !
இன்பம் சுரக்கும் இதயக் கனியே !
யுத்தம் என்னுள் யாரறி வாரோ ?
சித்தம் கலங்கிச் சிதைய விடாதே !.
உள்ளம் முழுதும் உந்தன் நினைவு .
வெள்ளம் போலே விரைந்துப் பாய்ந்துத்
தத்தித் தவிக்குது தத்தை உன்னிடம் .
மொத்த மாய்எனை முழுமை ஆட்கொள் !
பித்தன் எனையும் பிடியுள் அடக்கு .
உத்தமி உலகில் உன்னை யன்றி
சித்திரம் இல்லை ; செப்பிடு வேனோ ?
புத்தம் புதிதாய்ப் பூத்த மலரே !
நித்தம் உனையே நினைந்து
உத்தமன் எழுதிய உருவகக் கவியே !!
நிலவே ! வருவாய் ! நிதமும் என்னருகே !
உலவும் போதும், உன்றனின் நினைவே !!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்