நிகழ்காலம் மட்டுமே உங்கள் கையில்

ஆடம்பரத் தேவைக்கு உழைப்பவன் உழைப்பை விட்டுவிட்டாலும் பாதிக்கப்படமாட்டான்.
அன்றாடத் தேவைக்கு உழைப்பவன் ஒருநாளைக்கு வேலைக்குச் செல்லாவிடிலும் அவன் குடும்பமே பாதிக்கப்படும் பட்டினி நோயால்...

உங்கள் அரசு கொள்கையை அடியோடு வெறுக்கிறேன்..
எவனோ லாபமடைய எவனோ பட்டினி கிடக்கிறான்...
எவனோ பாதுகாக்கப்பட எவனோ கொல்லப்படுகிறான்...

அரசியல் கட்சிகள் ஒழிக.
அவற்றை பாதுகாக்கும் அரசாங்கம் ஒழிக..
எதையும் போராடியே பெற வேண்டுமென்ற நிலையுடைய இந்த நாடு ஒழிக...
அன்பை மறந்த மக்கள் ஒழிக...
என்றெல்லாம் தூற்றவும், சபிக்கவும் சித்தம் இடம் தரவில்லை கொண்ட உள்ளன்பாலே...

விரோதம் என்பது மனிதன் விளைவித்த மலம் தானே...
இறைவன் தந்ததெல்லாம் அன்பும், கருணையுமே...

கோழைகளின் வாழ்வைப் பறிக்கும் வீரர்களாய்,
ஏழைகளின் வாழ்வைப் பறிக்கும் பணக்காரச் சமூகமே செயல்படுகிறதென்றால்,
உங்களின் நோக்கம் தான் என்ன?
எதைச் சாதிக்க இவ்வாறு வாழ்கிறீர்கள்??

எதிர்காலத்தை அறிவீர்களா?
அல்லது கடந்த காலத்தை உங்களால் தான் மாற்றவும் இயலுமா?

நிகழ்காலம் மட்டுமே உங்கள் கையில்.
உண்மையை மறவாதீர்கள்..
காலன் வருவான் கணக்கை முடிக்க...
அதுவரை உத்தமராய் வாழுங்கள்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (7-Jul-17, 8:11 pm)
பார்வை : 416

மேலே