வெறுமை
என் வாழ்வில் மட்டும் ஏன்
இந்த வெறுமை!
புதுமை இல்லா ஒரே நிலை!
வாழ்வை ரசிக்க
வருடங்கள் பல காத்திருந்தும்
மாறவில்லை என் நிலை
ஏன் இந்த விதி.....
சுவாரசியம் இல்லா வாழ்க்கை!அவமானங்கள் பல கொடுத்ததும்
ஆறாமல் தூற்றும் சமூகம்
ஏன் இப்படி ஒரு நிலை!
சில சொந்தங்கள் இருப்பதை விட
இல்லாமல் இருப்பதே மேல்....
- மூ.முத்துச்செல்வி