பதில் சொல்வாயா இறைவா

சிந்தும் கண்ணீரை துடைக்க முயல்கிறது கை..
அதையும் தவறாக புரிந்து கொள்வார்களோ என்று தயங்குகிறது மனம்..
என்ன செய்வேன் இறைவா?

இதயத்தின் உள்ளிருப்பதை அறியும் தன்மை யாவருக்கும் வாய்ப்பதில்லையே..

கம்மிய குரல்..
அக்குரல் புதைந்துள்ள வேதனை...
அறிந்து கொள்ளும் தன்மையை எனக்கு ஏன் வழங்கினாய் இறைவா??

அகிலமெல்லாம் உனதாட்சி நடக்க ஏனிந்த பசியும், பட்டினியும்???..

இருப்பவன் வாழ்கிறான்...
இல்லாதவன் இருப்பவனிடம் கடன் கேட்க இதுதான் சமயமென இல்லாதவனை இருப்பவன் ஏமாற்றுகிறான் வட்டி என்ற பெயரில்...
இதுவும் தொழில் தருமமாம்...
கயவர் கூட்டங்களுக்கு கயமையே தருமமாம்...
என்னவொரு பிதற்றல்கள்???...

கதையாய் கூறக்கேட்டேன் அத்தனையும் இலைமறைவு...
உண்மையின் வழியில் சத்தியத்தின் தரிசனம் காணாத மானிடக் குலம் கண்கள் கலங்கி நிற்பதைப் பார்க்கும் போது அவர்களோடு நானும் நிற்கிறேன் அவர்களாயென்பதை உணர முடிகிறது வெட்டவெளிச்சமாய்...

ஆடம்பர உலகில் ஆடம்பரம் பெறும் பொருட்டு நானும் தொழிற்கல்வி பயில செல்கிறேன் அல்லவா!?
தொழில் தருமமென்று நியாயமற்ற வழிமுறைகளை நானும் கற்றேன் அல்லவா!?
யாவும் கசக்கிறது முன்பிருந்த என்னைத் திரும்பிப்பார்த்தால்...
என்ன மாயம் இது?

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (7-Jul-17, 9:09 pm)
பார்வை : 546

மேலே