உன் பெயர் மட்டுமே கவிதை
யாரோட கற்பனைக்கும் எட்டாத கவிதை.
என்னையும் ரசிக்க வைத்த அழகான கவிதை.
ஏழு ஸ்வரங்களிலும் யா௫ம் இசைக்காத கவிதை.
பதினாறு ராகங்களிலும் யா௫ம் பாடாத கவிதை.
ஒரு நாளும் சளிக்காமல் நான் படிக்கும் கவிதை.
மறுமுறை எழுதினாலும் மீண்டும் ஒருமுறை எழுத தூண்டும் கவிதை.
காவியங்களில் சொல்ல மறந்த கவிதை.
என் பெயரோடு சேர்த்து நீ படிக்கவே இன்னும் உயிரோடு வாழ்கிறேன்..
அது உன் பெயர் மட்டுமே.