சுயம்வரம் ஏதடி பெண்ணே
முகில் காற்றில் பனியோடு
களிந்து முகட்டில் விதர்க்கும் ...
அழகாக சிரிக்கும் நதியோ?
நதியில் நீராட
தீண்டல் ஆராதனை உறவோ?
ஆவலின் வேரில் ஆராதனை நிறைவோ?
உயிரின் பசியில்
உதிர்க்கும் தூரலில்
நினைவின் வேர்களின்று
கிளைகள் பிரசவிக்கும் இலைகளின் தென்றலோ?
பசுமையின் திண்னையில்
கைவீசிடும் செவ்வாழையோ?
பசித்திடும் இளமையின்
கங்கையோ?
பிதற்றுதலின் நிறமேதடி...
வானவில்லோ?
வானவில்லின் கோலங்களில்
எத்தனை புள்ளி?
எண்ணுவது மூங்கில் தோட்டத்தின்
பின்ணலோ?
நிறங்களின் நிறையில்
எதை தலையனையில் நிறப்ப?
வாரிக்கொள்ளும்
கண்சாடை அளவில்
அள்ளிக்கொல்ல
பொய்களின்றி
கைகளில் ரேகை மட்டுமே!
மழையில் கலங்கிடும்
நதிபோல்
நடுங்கிடும் மனமே!
சுயம்வரம் ஏதடி?
உனக்கும் எனக்கும்....