எத்தனை முத்தங்கள்

[] எத்தனை முத்தங்கள் ...
-------------------------------------------------------------------

சென்ற ஜென்மத்தில்
நடந்த ஒரு நிகழ்ச்சி -

அப்போதும் காதலர்களே
நீயும் நானும் !

அன்று ஒரு நாள்
அசரீரி ஒன்று ஒலித்தது ..
அது -
இன்று நீ தருகின்ற முத்தங்கள்
அடுத்த ஜென்மத்தில்
அவன் தேகத்தில் மச்சங்கள் ..!

சென்ற ஜென்மத்தில்
சிகப்பாய் இருந்தவன்
இந்த ஜென்மத்திலோ - நான்
கறுப்பாய் பிறந்தவன் ..!

எனக்கு தெரியவில்லை
உனக்காவது நினைவிருக்கிறதா
என் நிறத்தை மாற்றிய
உன் முத்தங்களின் எண்ணிக்கை ...


யாழ் ..

எழுதியவர் : யாழ் கண்ணன் (10-Jul-17, 7:20 pm)
Tanglish : ethtnai muthangal
பார்வை : 334

மேலே