நம் மனமே நம் நாய்க்குட்டியானால்

தோ தோ நாய்க்குட்டி...
துள்ளி வா நாய்க்குட்டி...
வீட்டைச்சுற்றும் நாய்க்குட்டி...
என்னைக் கண்டால் வாலையாட்டும் நாய்க்குட்டி...
நன்றியுள்ள நாய்க்குட்டி...
என் முதன்மைத் தோழனான நாய்க்குட்டி...
நல்லுணவை மட்டுமே புசிக்கும் நாய்க்குட்டி...
ஊராரைத் துன்புறுத்தாத நாய்க்குட்டி...
அடக்கமான நாய்க்குட்டி...
அழகான நாய்க்குட்டி...
உண்மையன்பின் அடிமை நாய்க்குட்டி...
என்னைக் காக்கும் நாய்க்குட்டி...
புது யுக்தி போதிக்கும் நாய்க்குட்டி...
இறைவனை வணங்கும் நாய்க்குட்டி...
சுத்தமான நாய்க்குட்டி...
பொல்லாங்கு செய்யாத நாய்க்குட்டி...
குழந்தைகள் அழுதால் அழாதே என்று " லொள் லொள் " என்று குலைக்கும் கருணையுள்ள நாய்க்குட்டி...
தன்னலமற்ற நாய்க்குட்டி...
செஞ்சோற்று கடனுணர்ந்த நாய்க்குட்டி...
விளையாடி மகிழும் நாய்க்குட்டி...
கொடூரமில்லா நாய்க்குட்டி...
வளர்த்தவரை பிரதிபலிக்கும் நாய்க்குட்டி...
மனிதரை அறிந்த நாய்க்குட்டி...
வஞ்சமில்லா நாய்க்குட்டி...
பொறாமை இல்லா நாய்க்குட்டி...
தனக்கிட்ட உணவை மிச்சம் பிடித்து சிறு பறவைகளுக்கு வழங்கும் நாய்க்குட்டி...
வேட்டை குணமில்லா நாய்க்குட்டி...
வேடிக்கையான நாய்க்குட்டி...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (10-Jul-17, 9:07 pm)
பார்வை : 557

மேலே