மழையோடு ஒரு செல்ஃபி

[] மழையோடு ஒரு செல்ஃபி ...
-------------------------------------------------------------------


இந்த திசையில் மழை பெய்வதாக
வானும் காற்றும் சொன்ன போதே
அந்த திசையில் பயணித்தேன் ..

மலை பயணம் போல
இது -
மழை பயணம் ..!

நான் சேறும் வரை
மழை தூரும் என்று
நம்பிக்கையோடு் நகர்ந்தேன் ..

இப்போது -
எல்லை கட்டி பெய்யும் மழையின்
எல்லையை பார்த்துவிட்டேன் ..

மழையின் சிறையிலிருந்தே
மழை பார்த்து பழகியவன்
முதல் முறையாக
மழைக்கு வெளியில் !
மழைக்கு அருகில் !

குடையின்றி கூரையின்றி
தலைக்கு மேலே வானம்
நனையாமல் இரசிக்கிறேன்
என் எதிரே பெய்கிறது மழை ..!

கீழிருந்து மேலாக
அன்னாந்து பார்க்கிறேன்
தண்ணீர் கோபுரங்களை !

ஜன்னல் வழியாக
விளையாடியதை போல
கைகள் நீட்டி
விளையாடிக்கொண்டிருக்கிறேன்
வெட்ட வெளியில் நின்றவாரே ..!

எல்லை தாண்டி
ஒன்றிரண்டு துளிகள்
என்னை தூண்டியது
தன்னில் நனைய சொல்லி ..

அருஙிக்குள் நுழைந்நு
நீராடுவதை போன்று
மழைக்குள் நுழைந்தேன்
மழையாட ..!

உலகின் உயரமான நீர்வீழ்ச்சி
மழை தானென
நினைத்து கொண்டேன் !

சொட்ட சொட்ட
நனைந்து முடித்த கையோடு
ஒரு செல்ஃபி
எடுத்துக்கொண்டேன் மழையோடு ..!


- யாழ் ..

எழுதியவர் : யாழ் கண்ணன் (12-Jul-17, 4:51 pm)
பார்வை : 172

மேலே