நா முத்துக்குமார்
""" 'முத்துமுத்தாய்ப் பூத்திருக்கும் முல்லைப் பூவைப் புடிச்சிருக்கு...’
என்றே தொடங்கிய ஒரு சகாப்தம் ஏனோ பாதியிலே முடிவுற்றுது ....
காதலில் விழுவது ,எழுவது , பிரிவு , பாசம் ,ஒரு தலை காதல் ,
பாரபட்சம் பார்க்காமல் ஏறக்குறைய எல்லா உணர்வுகளையும் புரட்டியவர்
அவருக்கான சமர்ப்பணம்.... """
கண் பேசும் வார்த்தைகள் புரியாம நிற்கையிலேயே
விழியை சுடும் சுடரோடு கலந்து என் நிலைமையை
எனக்கே தெரியாமல் புரியவைத்தாய்
போதிய வரிகளிலேயே
வார்த்தைகளிலேயே நடனம்
வரிகளிலேயே திறமை
தேடியெடுத்த சொற்கள்
இன்னமும் புதுமை போதிக்கும் அர்த்தங்கள் .........
பறவையே எங்கு இருக்கிறாய் என கேட்டு உன் தடையங்கள்
தேடிவருகிறேன் என்று அதனிடம் சொல்லி ..............
நம்மை முதல் காதலிடம் அழைத்து செல்லும் இல்லை இல்லை
இழுத்து செல்லும் நினைவுகள் .....
அப்பாவுக்காக அழகிய பாடல்
அனைவரும் கலங்கிவிடுவோம்
கண்ணீர் துளிக்காக பயந்து அந்த பாடலை
பலமுறை தவிர்த்ததும் உண்டு
என்ன பெயர் என்றே தெரியவில்லை
எப்படி எழுதமுடியும் என்ற சவாலுக்கு பதிலாக
பாடல் முழுதாய் பதிவிட்டவர் .......
மறந்துபோய் அவர் நம்மை பிரிந்து இருக்கலாம் ...
ஆனால் அவரை மறக்காமல் இருக்க
அவரின் எழுத்துக்கள் எனும் உணர்ச்சிகள் நம்மிடம் தான் இருக்கு ......................