முகவரியில்லா கடிதங்கள்

உன் நினைவு
என்பது வலை
அதில் விடுபடாதபடி
மாட்டிக்கொண்ட மீன்
நான்

உன்
மறதியின்
நினைவு நான்

உன்னை
பிடித்திருக்கிறதென்று
பொய்யாவது சொல்லிவிட்டு போ என்னையாவது
பிடிக்கட்டும் எனக்கு

எழுதியவர் : நிலா ரசிகன் (13-Jul-17, 9:08 pm)
சேர்த்தது : janarthanan59678e1de1149
பார்வை : 55

மேலே