விளையாட்டு

காதோடு காதாக கதைபேசும் மழலைகள்
ஏதேதோ நினைவுகளில் எம்மருங்கும் இன்பங்கள்
பாதகங்கள் அறியாத பண்பான கைப்பேசி .
சாதகமும் இல்லாத சந்ததியின் விளையாட்டு .

துன்பங்கள் மறந்தேபோய் தூதாகும் சந்தோசம்
அன்பினிலே மரக்கிளையில் ஆனந்த உரையாடல் .
வன்முறைகள் வாழ்வினிலே வந்திடாது எந்நாளும் .
சின்னங்கள் அழகான சிந்தையிலே உருவாகும் .

ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன் ( நி . மு - 323 )

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (17-Jul-17, 10:31 am)
சேர்த்தது : sarabass
Tanglish : vilaiyaattu
பார்வை : 55

மேலே