முதிரா கன்னி 4

'மாப்ள, இந்த கதையெல்லாம் எங்கேயிருந்து புடிக்கிற?'
' அதெல்லாம் அப்படித்தான்'
அன்றிறிரவு நான் மட்டும் தனியாய். அவன் ஷிப்டுக்கு சென்றிருந்தான். இருவருக்கும் ஒரே ஷிப்ட் அமைவது கொஞ்சம் கடினந்தான். எப்போதாவது அப்படி அமைவதுண்டு. நான் மட்டும் தனியாய் படுத்திருந்தேன். மேலே மின் விசிறி மெதுவாக சுற்றிக் கொண்டிருந்தது. மிக மெதுவாக, கர்ரக் ..'கர்ரக்... என்று சப்தம் வேறு எழுப்பி கொண்டிருந்தது. நாள் முழுவதும் கொளுத்திய வெயிலின் தாக்கம் உள்ளே அனத்தியது.சென்னையில் ஃபேன் இல்லாமல் தூங்குவதென்பது... ஆக்ஸிஜன் மாஸ்க் இல்லாமல் கடலுக்குள் நீந்துவது போல. கொசுக்களின் தாலாட்டு ஒரு பக்கம், வெயில் விட்டு போன வெக்கையின் தாக்குதல் ஒரு பக்கம்.கிராமத்தில் வீட்டு முற்றத்தில் காற்று அம்சமாய் வீசும்போதே எனக்கு தூக்கம் வராது. இப்போது மட்டும் எப்படி தூக்கம் வரும்.
ஒரு கொசுவர்த்தி சுருளை எடுத்து கொண்டு வராண்டாவுக்கு வந்தேன். போர்வையை விரித்து கொண்டு படுத்தேன்.நிமிடங்கள் தான் கடந்து போனது. நித்திரை வரவேயில்லை.
பக்கத்து அறையிலிருந்து மெலிதான முனங்கல் சப்தம் கேட்டது. கூடவே கொலுசுகளும் சிணுங்கி கொண்டிருந்தது. புஷ் ... புஷ்யென்று பாம்பின் சீறல் போல, மோகங்கொண்ட இரு தேகங்களின் சீறல். கொலுசு, வளைகளின் இசை வெளியே கஜல் கவிதையாய் வழிந்து கொண்டிருந்தது.
கூட்டு குடும்பங்கள் குறைந்து விட்ட போதிலும், குறுகிய வீடுகளில் குடித்தனம் நடத்துபவர்கள் படும் அவஸ்தை மிகவும் வேதனை நிறைந்தது. அதிலும் பருவம் வந்த பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தனிமையான தருணங்களை எதிர்நோக்கி காத்திதிருக்க வேண்டியதிருக்கிறது. தவறுகள் அதிகரிக்க இதுவும் கூட ஒரு காரணம் தான். பெண்கள் அணிந்திருக்கும் அணிகலன்களே அந்தரங்கங்களை அம்பலபடுத்தி விடுகிறது.
உடலும், மனமும் சூடாக அதற்கு மேல் அங்கு படுக்க இயல் வில்லை. இந்த இம்சையான இசைக்கு அந்த பேனின் சத்தமே மேலானதாய் தோன்றியது. சட்டென போர்வையை உதறி எழுந்தேன். பருவம் வந்த பின் தேகத்தை அடக்குவதென்பது மிகவும் சிரமமாய் தான் இருக்கிறது. அதுவும் விஞ்ஞானம் வளர்ந்து விட்ட சூழலில் எங்கு திரும்பினாலும் ஆபாசம். சினிமா, தொலைக்காட்சி , புத்தகம் இப்படி எதிலும் ஆபாசம்.கிறங்கிய கண்களோடும், மேலேறிய ஆடைகளுடனும் ஒட்டப்பட்டிருக்கும் ஆபாச பட சுவரொட்டி ... ஒரு நிமிடமேனும் நடையை நிறுத்தி விடுகிறது.
நாகரீகத்தின் வளர்ச்சி எல்லா விஷயங்களிலும் நீண்டு கொண்டே போக ... இந்த உடை விஷயத்தில் மட்டும் சுருங்கி கொண்டே போகிறது. இறுகலான ஆடைகளில் அங்கம் மூச்சு திணறும் போதும், மேலேறிய ஆடைகளுடன் வலம் வரும் போதும் நரம்புகள் முறுக்குவதை தவிர்க்க முடிவதில்லை. பல இடங்களில் இது போன்ற காட்சிகளால் விழிகளின் கோணம் தவறியும், வாகனங்ககளின் கோணம் தவறியும் விபத்து நடப்பபது தனி. இது போக உரமேற்றப்பட்ட உணவு பொருட்கள், உடல் ரீதியாய் பல மாற்றங்களை வேகமாய் உண்டு பண்ணி விடுகிறது. இப்படிபட்ட சூழ்நிலையில் மனக்கட்டுபாட்டோடு ஒருவன் இருப்பதென்பது நாய் வாலை நிமிர்த்துவதற்கு சமமானது...

எழுதியவர் : பனவை பாலா (18-Jul-17, 12:08 pm)
சேர்த்தது : பனவை பாலா
பார்வை : 381

மேலே