சத்தியமே நிரந்தரம்
ஆயுதம் ஏந்தி உலகைக் காக்கும் மாவீரர்களே யாரிடமிருந்து இவ்வுலகைக் காப்பாற்றுகிறீர்கள்?..
வீட்டுக்கு வீடு வேலி...
நாட்டுக்கு நாடு இரும்பு முள் வேலி...
பிரிவினைகளுக்கு கணக்கில்லை பித்தம் தலைக்கேறிய மனிதர்களுக்கிடையிலே..
மக்களே ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்தீர்களே உங்களுடைய தலைவனை...
உங்கள் மரணத்தைத் தான் உங்கள் தலைவனால் தடுக்க இயலுமா?
உங்களுடைய தலைவனையும் மரணம் கவர்ந்து செல்லுமென்பதே சத்தியம்...
இதில் பிரதமராக இருந்தாலென்ன?
முதலமைச்சராக இருந்தாலென்ன?
உங்கள் பதவி அதிகாரம் மரணத்திடம் செல்லுபடியாகுமோ?
தன்னைத் தானே கட்டுப்படுத்த இயலாமல் அடுத்தவரைக் கட்டுப்படுத்த எண்ணும் உங்களுடைய அறிவியல் உணரவில்லையா,
மனிதர்களாகிய நாம் இந்த பரந்த அகிலத்தில் மிகச்சிறிய துகள்களென்று???
ஆடம்பரமும், அறியாமையும் மேலோங்க, நீங்களாற்றும் ஒவ்வொரு ஆணவ செயலும் உங்களை மேலும் முட்டாள்களாக ஆக்குகிறதென்பதை அறியவில்லையா,
உங்கள் பகுத்தறிவு???
இந்த உலகை ஆள்வதற்கு ஆசை கொண்டு பக்கத்து வயலை அபகரிக்க இடைப்பட்ட வரப்பைச் சுரண்டுவது போலே பக்கத்து நாட்டைச் சுரண்டும் இந்த அரசியல் என்பதெல்லாம் மனிதர்கள் வகுத்த சூழ்ச்சியென்று அறியாயோ என் நெஞ்சே???