நான் என்னும் நாம்

உள்ளதை உள்ளதென உலகமே உணர்த்தியபோது
உள்ளத்து உள்ளதைக் கேட்டு உணர்பவன் நான்
இதுதனை இதுவென காண்பித்த போதினிலே
இதுவேன் இவ்வாறென ஆராயும் துடிப்பினன் நான்

குருசென;கல்லென;கல்லரையென தேடிக்கையூட்டு அளிப்பவர் மத்தியில்
சிலைதனைக் கலையென அழகென உயிரெனக் காண்பவன் நான்
கல்லை மட்டும் காண்பவனல்ல;கடவுளையும் கண்டவனல்ல!
நான் கண்ட இறை எல்லாம்
உயிரூட்டி,உதிரம் கொடுத்து ஈன்ற தந்தை,தாயும்,
பிறர்க்காக வருந்தும் மனம் கொண்டவரையும் தான்.
பிறர்தனைத் தொழுதுண்டு தொழிற்செய்வார் மத்தியில்
கற்றலைத் தொழிலாய்த் தொழுபவன் நான்
இருபவரக்கொன்று ஈந்து மகிழ்பவர் இருக்கையில்
இல்லையெனினும் இல்லத்தார் அகமகிழ்வுற்றிருதல் கண்டு வியந்தவன் நான்
தன்வட்டம் இதுவென உலகம் சுருக்கி வாழ்பவர் இடையில்
வட்டம் தாண்டி விண்வெளிதொடத் துடிக்கும் பித்தன் நான்
உணவுண்டு உடல்வளர்த்து உயிர்வாழும் போதினிலே
உழவனின் உழைப்பறிந்து உளமாற கும்பிட்டவன் நான்
நான் என்று இருமாபுற்று தலைகணத்து வாழ்கையில்
நான் என வெளிப்பட்டது நம் உலகத்தின்
எண்ணமென அறிந்து ஐ-யுற்றவன் நான்!

எழுதியவர் : லோகேஸ்கண்ணன் (18-Jul-17, 11:58 pm)
சேர்த்தது : லோகேஷ்கண்ணன் ச
Tanglish : naan ennum naam
பார்வை : 77

மேலே