என் காதல் ராசாவே
![](https://eluthu.com/images/loading.gif)
என்காதல் ரோசாவே ஏன்தவிக்க விட்டாய்
****ஏங்குமுளம் உன்நினைவில் எங்கேநீ சென்றாய் ?
புன்னகைத்த பைங்கிளியே பொங்குதடி உள்ளம்
****பொலிவிழந்து போனாயோ புரியவில்லை கள்ளம் !
சென்றவிடம் சொல்லாமல் செயலிழக்கச் செய்தாய்
****செந்தூரப் பொட்டழகே தெரிந்துமுயிர் கொய்தாய் !
மின்னுமெழில் முகங்கண்டு மிகவுடைந்து நின்றேன்
***மெட்டியொலி சத்தத்தில் மெய்விதிர்த்தேன் நானே !
சியாமளா ராஜசேகர்