பூந்தோட்டத் திருடன் நான்

நிலாக்காரி நீ
உலாப் போகும் இதயன் நான்
கனாக்காரி நீ
கவிபாடும் கவிதைக்காரன் நான்
மௌன மொழிக்காரி நீ
அதற்குப் பொருள் எழுதும் பேனாக்காரன் நான்
பூக்காரி நீ
ஓசைப் படாமல் புகுந்து மனமலர் திருடும் பூந்தோட்டத் திருடன் நான் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Jul-17, 9:30 am)
பார்வை : 84

மேலே