உன்னை உணர்ந்துநில்லு தமிழா

தேனும் திணை மாவும்
முக்கனியும்,காய் கிழங்கு வகையும்
கொண்டு உணவு செய்து
விருந்தோம்பி வந்தான் தமிழன்
பைய பைய தமிழனின்
தனித்தன்மை அத்தனையும் மறந்து
பண்பு,கலாச்சாரம்,மொழி மறந்து
மேல்நாட்டு மோகத்தில் மனதை
பேதலிக்கவிட்டு தான் கெட்டதுடன்
தன் மக்களையும் இந்த மோகத்தில்
ஆழ்த்துவது என்ன நியாயம்தமிழா
உறங்கும் உன் உள்ளத்தை தட்டிக் கேள்
உனக்கு இதற்கொரு நல்ல பதில் கிடைக்கும்
செம்பா அரிசியில் சோறாக்கி நெய் ஊற்றி
குழம்பு வகை வைத்து அன்று தோட்டத்தில் அறுத்த
கத்தரி,வெண்டை மற்றும் கீரை கொய்து
சுவைத்தரும் கரி வகைகள் வைத்து
பெரும் மனதோடு விருந்தினருக்கு உணவிட்ட
தமிழா,இவை அனைத்தையும் மறந்து
இன்று நீ நன்மைப் பயக்கா மைதா மாவில்
செய்த பிஸ்ஸா,மக்ரோனி,பாஸ்தா என்று
உடம்புக்கு ஊரு விளைவிக்கும் உணவை நாடி
போனதேனோ தெரியலையே

இன்று மைதாவை ஒரு மாநிலம் ஒதுக்க
போவதாய் செய்தி காதில் வந்தடைந்தது
கூடவே இப்போது நம் தமிழ்நாட்டிலும்
குருணை,திணை சோளம் இவற்றிற்கு
மவுசு கூடுது என்று அறிந்து குதுகுலித்தேன்

மேலை நாட்டு மோகத்திலிருந்து மீண்டுவிடு
தமிழா உன்னை தமிழன் என்று உணர்ந்துவிடு
தமிழ் மொழியைக் காத்து தமிழ் பண்பை காத்து நின்று
தமிழ் மண்ணிற்கு ஏற்றம் என்றும் தந்து நில்லு
'தமிழன் என்றொரு இனம் உண்டு
தனியே அவற்கொரு குணம் உண்டு
அமிழ்தம் அவரது மொழியாகும்
அன்பே அவரது வழியாகும் ' என்று அன்று
புலவர் பெருமகன் சொன்னது போல்
வாழ்ந்திடலாம் தமிழா !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Jul-17, 2:12 pm)
பார்வை : 66

மேலே