என்ன இது

என் மனதின்
திசுக்கள் எல்லாம்
ஒரு வலி
பரவுகிறது !
என் மூளையின்
சில பகுதிகள்
வேலைநிறுத்தம்
செய்கின்றன !
ஒரு வகையான
அமைதி
என்னை நிரப்புகிறது !
ஏதோ உணர்வு ...
என் உயிரை
குடைகிறது !
ஓ ! கடவுளே..... !
என்ன இது ??
மரணத்தின்
அறிகுறியா ?
இல்லை ....
இது ஜனனத்தின்
அறிகுறி !
ஆம் ,
என் கவிதையின்
ஜனனம் !