அவளின் வெளியூர் பயணம்

[] அவளின் வெளியூர் பயணம் ...
------------------------------------------------------------------------


உடல்கள் இணையா தூரம் சென்றால்
இதழ்கள் போதுமென்று
இறங்கி வந்திடுவேன் ..!

இதழ்கள் இணையா தூரம் சென்றால்
விரல்கள் போதுமென்று
விரக்தி தவிர்த்திடுவேன் ..!

விரல்கள் இணையா தூரம் சென்றால்
விழிகள் போதுமென்று
வலிகள் குறைந்திடுவேன் ..!

நீயோ -
விழிகளும் இணையா தூரம் போகிறாய்
நினைவுகளும்
நித்திரை கனவுகளும் மட்டுமே
எப்படி போதும்
இரண்டு நாள் பயணம் முடிந்து
நீ திரும்பும் வரையில் ..!

அவ்வப்போது
அழைப்பேசி வழியான
உன் உரையாடல்களால் தான்
இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது
என் வாழ்க்கை ..!

- யாழ் ..

எழுதியவர் : யாழ் கண்ணன் (20-Jul-17, 5:14 pm)
பார்வை : 138

மேலே