வளைந்து கொடுத்தல்

ஆதார் எண் இணைத்து
திருமணப் பொருத்தம்
பார்க்கப்படும்.
சோதிடர் சொக்கு.

*
வளைந்து கொடுத்துப் போவது
மனிதர்களின் சுபாவம்.
மலைகளின் பாதைகளையும்
அப்படியே
வளைய வைத்து விட்டார்கள்.
*
சட்டென இடிந்து விழுவதில்லை
மூங்கில் பாலங்கள்.
திடீரென
சரிந்து விழுகின்றன
சிமெண்ட் மேம்பாலங்கள்.

ந.க. துறைவன்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (20-Jul-17, 3:54 pm)
Tanglish : valainthu KODUTHAL
பார்வை : 145

மேலே