ஒருபக்க காதல்கதை பாகம்-30

அவன்: சரி..உனக்குன்னே வெச்சிக்கோம்மா..நான் அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க ஒத்துப்பியா?..இல்ல அவ உன்பொன்னா இருந்தா இந்த தானத்துக்கு சம்மதிப்பியா?

அம்மா: (அவள் மனதில் மறைத்ததை முகத்திற்கு நேரே கேட்டவுடன் சற்று யோசித்து ..)

வாரிசு இருக்கறதுனால மட்டும் தான் இன்னும் நம்மூருல குடும்பம்னு ஒன்னு இருந்துட்டு இருக்கு, நீபாட்டுக்கு தத்தெடுத்துகிட்டா என்ன, பெற்றால் தான் பிள்ளையான்னு நல்லவனா பேசுவ..அதது அந்த வயசு வந்தா தான் தெரியும்..அப்பான்னு கூப்புடும்போது குற்றவுணர்வில்லாம திரும்பிப் பார்க்க முடியணும்..தப்பு செய்யும்போது ..இது நம்ம புள்ளையா இருந்திருந்தா ..ங்கிற எண்ணத்த மறைக்கணும்..இன்னும் நெறய இருக்கு..உன் வயசுக்கு உன்னால புரிஞ்சுக்க முடிஞ்ச உலகம் மட்டும் தான் உலகம்னு நம்பாத..உலகம் அதவிட ஆழமானது..மோசமானது..நான் சுயநலவாதி தான்..எனக்கு என் பேரனோ பேத்தியோ பிறந்தா..கண்ணப்பாரு அவன் அப்பன மாதிரியே இருக்குன்னு சொல்லணும்..இருக்கணும்..

அவன்: ஏதும் பேசாமல்..அங்கிருந்து நகர்ந்து ஜன்னலோரம் பார்க்க நின்றுகொண்டான்

அம்மா: என்னடா..இப்டி ஏதும் சொல்லாம அந்த பக்கம் பாத்துட்டு நின்னா எப்புடி?..எனக்கேட்கும் நேரம் ஒரு மெல்லிய ஓசை "சொட்"டென அவள் ஜன்னலோரம் வைத்திருந்த தண்ணீர்த் தொட்டியில் கேட்டது..நெருங்கிப் பார்த்தாள்..

அவன்: நீயுமா..மா..?..என கண்களில் கோபத்தையும்..சோகத்தையும் கலந்து வழிந்துகொண்டிருந்தது கண்ணீர்

அம்மா: டேய்..அப்பு..இப்ப எதுக்குடா அழுவுற..அம்மா உன்ன காயப்படுத்திட்டேனா டா..ஏதோ கோவத்துல பேசிட்டேண்டா..தப்பா ஏதாச்சும் பேசிருந்தா மன்னிச்சிரு" என முந்தானையில் முகம் துடைத்து மன்றாடினாள்..

அவன்: உனக்கு என் வேலையப் பத்தி சொல்லிகொடுத்தேன்.. பொது அறிவு..இலக்கியம்..எல்லாம் சொல்லிக்கொடுத்தேன்..என்னோட சிந்தனைய கொடுக்க முடியலமா..

அம்மா: நீ சின்ன பைய்யன் டா..இன்னும் வாழ்க்கைல பார்க்கவேண்டியது எவ்வளவோ இருக்கு..உன் வயசுக்கு உனக்கிருக்குற அறிவை பாத்து நான் மலைக்காத நாளே இல்ல..உனக்கெந்த அளவுக்கு அறிவிருக்கோ அதைவிட ஒருமடங்கு அதிகமாவே மனிதாபிமானம் இருக்கு..அதனாலதான் இப்பகூட அழுதுட்டு இருக்க..எம்புள்ள மாறி கோடி ரூபா கொடுத்தாலும் கெடைக்காது..உனக்கு எல்லாமும் கிடைக்கணும்..உன்ன நல்ல நிலமைல பாக்கணும்டா நான்..நான் என்ன பத்தா பெத்துவெச்சுருக்கேன் ..ஒன்னு போன இன்னொன்னு..ன்னு இருக்குறதுக்கு ..ஒண்ணே ஒண்ணுன்னு..வெச்சுருக்கேன்..என்னால எதையும் விட்டுக்கொடுக்கமுடியாது..

அவன்: பாசத்தில் வாயடைத்து..ஏதும்பேச முடியாமல்..கட்டியணைத்து ...தோளில் சாய்ந்தழுதான்...

எழுதியவர் : வெங்கடேஷ் நாகராஜன் (20-Jul-17, 8:43 pm)
சேர்த்தது : வெங்கடேஷ்
பார்வை : 390

மேலே