கதை

கோவையில் உள்ள ஆசிரமத்தில் வாழ்ந்து வந்தான் பிரபு. பிரபு தனது தாய்,தந்தையை பார்த்தது இல்லை. பிரபுவின் வாழ்க்கை, அவன் கையில் இருக்கும் கடிகாரம் முள்  போல் ஓடியது. பிரபுக்கு 17 வயதில் ஆசிரமத்தை விட்டு வெளியே வந்து விட்டான். அவனுக்கு எல்லா  பாடத்திலும் நடுத்தர மதிப்பெண்  பெறும் அளவுக்கு அவனுக்கு படிப்பது பிடிக்கும். தனது கல்லூரி படிப்பை பகுதி நேர வேலையின் மூலமாக தொடங்குகிறான் பிரபு. தனது வாழ்க்கையப்பற்றி எந்த கனவுகளும் இல்லை அவனுக்கு  அது வரைக்கும்.  தற்போது அவனுக்கு ஒரு நண்பி பழக்கம், ஆனால் பிரபு தனது வாழ்க்கையில் யாரிடமும் நெருங்கி பழகியது இல்லை. அவள் பெயர் பவித்ரா. பவித்ரா சற்று அழகு படைத்தவள், அதைப்போல பணமும் அவளிடம் உண்டு . இவர்களது பழக்கமும், கல்லூரி நாட்களும் ஓடியது. இரண்டு ஆண்டுகள் முடிந்தது.  பிரபுவுக்கு அவள் மேல் இருக்கும் எண்ணம் எதுவென்று குழம்பினான். காதலா?, நட்பா?. ஆனால் தனது உலகம், தாய், தந்தை, உறவுகள் எல்லாம் அவள் தான் என நினைத்து  தனது மனது வழியை பகிர்ந்திக்கிற முடிவு செய்கிறான்.  பவித்ராவை தேடினான், கண்டுபிடித்து பவித்ராவிடம் செல்கிறான்..
பிரபு: பவித்ரா உன்னிடம் கொஞ்சம் பேசனும்..
பவித்ரா: ம்ம்ம் . பேசலாம். ..
பிரபு: எப்படி ஆரம்பிக்கிறது தெரியல. . ஆனால் சொல்லியாகனும்...
பவித்ரா: பரவாயில்லை ஏதுவாக இருந்தாலும் சொல்லு. ..
பிரபு: என் உயிரில் பிறந்த என் காதலை உன்னிடம் கூற வந்தேன். ஐ லவ் வ்வூ.
பவித்ரா: எதுவும் சொல்லாமல்  கிளம்பிவிட்டாள் ..
பிரபு அந்த இடத்தில் இருந்தது கிளம்பினான் ஆனால் அவனது மனது படும் பாடு என்னவென்று சொல்லமுடியாது .... பல்வேறு கேள்விகள் , பல்வேறு பதில்கள். .. பிரபுவின் மனதின் எண்ண ஓட்டம் பல மடங்கு வேகத்தில் ஓடியது. ... பிரபு அப்படியே சிறிது தூரம் நடந்தான். அங்கே பவித்ராவும் அவளது நண்பர்களும் நின்றனர். பிரபு அருகே சென்று மரத்தின் பின்னால் மறைந்து கொண்டு அவர்கள்  பேசுவதை கேட்கிறான். . ( பவித்ராக்கு மூன்று நண்பர்கள்.  சுவிதா, உமா, மீனாள்..)
மீனாள்: ஏய், பவித்ரா எப்போடீ பார்ட்டி
உமா: பந்தையத்தில் வின் பண்ணவும், அவனை ஏமாத்தவும் உனக்கு இவ்வளவு நாளா. சொல்லு பார்ட்டி எப்போ....
சுவிதா: அவனிடம் நீ நடீச்சி(ஆகட்) காதலை சொல்ல வைக்கிறதுக்கு இவ்ளே நாளா..
மீனாள்: நானா இருந்தா இந்நேரம் நிறைய பேர் என் பின்னால் திரிய வச்சிருப்பேன்..
பவித்ரா: ம்ம்ம். இப்ப போட்டியில் நான் தான் வின் . அதனால நீங்க தா எனக்கு பார்ட்டி கொடுக்கனும் அதனால எல்லாரும் வாங்க போகலாம் என்று கூறினார்கள். எல்லாரும் கிளப்பினார்கள். பிரபு மரத்தின் பின்னால் இருந்து வந்தான் (கண்ணீர் ஓடியது, கண்கள் மிகவும் சிவந்திருந்தது. தற்போது பவித்ராக்கு புரிந்து விட்டது பிரபுக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்று).  பவித்ராக்கும், அவளது நண்பர்களுக்கும் பதட்டத்துடன் பிரபுவை பார்த்தனர் ..
பிரபு , பவித்ராவிடம் போனான்.
 பவித்ரா: உன் மூஞ்சிக்கு காதல் ஒரு கேடு. நீ ஒரு அனாதை. என்னை கல்யாணம் பண்ணி பணக்காரன் ஆகிறலாமுன்னு பார்க்கிறியா என்று அவனிடம் கூற. அவளது நண்பர்கள் சிரிக்க. அங்கிருந்து உணர்வு அற்ற உருவமாக நடந்தான். பிரபுக்கு தனது நிலைமையையும், தனது முகத்தினையும் பிடிக்கவில்லை. தன் நிலமையை அவள் கூறியது அவன் காதுகளை உடைக்க...இரவு முழுவதும்  அழுது அழுது படுத்திருந்தான், ஆனால் மறுநாள் விடிந்தது. ... பிரபுவின் மனதுக்கு விடிய வில்லை. .. ஆறுதலுக்கும் ஆள் இல்லை,உணர்வினை பகிர்ந்து கொள்ளவும் ஆள் இல்லை. இப்படி பட்ட உறவுகள் இருப்பதை விட அனாதையாக வாழ்வது மேல் என்று தனது தாயையும், தந்தையையும் நினைத்து நினைத்து   மீண்டும் தனது வாழ்க்கை தொடங்கினான் ஒரு அனாதையாக. .....

எழுதியவர் : பிரபுதோவா (20-Jul-17, 10:15 pm)
சேர்த்தது : பிரபுதேவா சுபா
Tanglish : kathai
பார்வை : 403

மேலே