கதை
காட்டில் ஒரு சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன் தினமும் தனது காட்டில் இருந்தது வளர்ந்து வரும் நகரத்தினை(city) பார்க்கிறான். விதவிதமான வடிவங்களில் ஊர்திகள், கண்ணைக் கவரும் மின் விளக்குகள், மிகவும் நிளமான தொடர்வண்டிகள். இவைகள் அனைத்தும் தனது வேலையை தனது வழியில் நடத்துகின்றது. ஆனால் அவனுக்கு தெரியாது அதன் வழியில் குறிக்கிட்டால் என்ன நடக்கும் என்பது... இதன் மேல் ஆசை கொண்டு அவன் நகரத்து வாழ்க்கையை தொடங்க நினைக்கிறான். காட்டில் வாழும் போது அவனுக்கு சில பல நல்லொழுக்கங்கள், மற்றும் சில கோட்பாடுகள்( திருட்டு, பொய், உழைப்பின்றி சாப்பாடு இவைகளை வெறுப்பவன்) இருந்தது. அதுபோல ஆண்களும், பெண்களுக்கும் சில பல கட்டுப்பாடுகள் இருப்பதை அவன் காட்டில் அனுபவித்தும், பார்த்தும் உண்டு. தனது மலையை விட்டு கீழே இறங்கிய அவன் மலை அடிவாரத்தில் ஒரு கிராமத்தை அடைகிறான். அவனுக்கு உடைகள் மற்றும் சில புதிய வகை உணவுகள் கிடைக்க சில மாதங்களுக்கு அங்கே அவன் தங்குகின்றான். ஆடைகள், உணவு மாற்றம், மொழியின் பரிணாம மாற்றம் மற்றும் மனித வாழ்க்கை மாற்றம் கிடைக்கிறது. சிறு சிறு வேலைகள் செய்து பணமும் அவனிடம் இருக்கிறது. இவைகளை எடுத்துக்கொண்டு அவனது ஆசை வாழ்க்கை தொடங்க வருகிறான் நகரத்துக்கு. ஆச்சரியம்! வியந்து பார்க்கிறான்... விதவிதமான வடிவங்களில் ஊர்திகள் வரவும், போவதுமாக இருந்தது. சிறிது நேரம் ஆனதும் அவனுக்கு பசிக்க தொடங்கியது. அவனது சாலைக்கு(road) அந்த பக்கம் ஒரு சிற்றுண்டி(hotel) அதனைப் பார்த்து தனது கால்களை நகர்த, மனிதர்கள் அனைவரும் விளக்கின் ஒலிக்காக(signals) காத்திருக்கிறார்கள். ஒலி வந்தவுடன் சாலையை கடக்க முயல்கிறான் அப்போது அவனுக்கு பின்னால் வந்த முதியவரை ஒரு வண்டி வேகமாக தாக்கிவிட்டு நிற்காமல் செல்கிறது... முதியவரை யாரும் தொடாமல் அருகில் செல்லாமல் காவலருக்காகவும், அவசர ஊர்திக்காகவும் காத்திருக்கிறார்கள். அவனை பார்தவாறே அந்த முதியவர் தன் கண் முன் இறக்கிறார். அந்த உயிரற்ற உடலை அவசர ஊர்தியில் ஏற்றினர். ஊர்தி சொன்று விட்டது. .. அந்த கடையில் சற்றும் மாற்றம் இல்லாமல் வியாபாரம் நடக்கிறது. தனது கண்கள் கலங்கிய நிலையில் சாப்பிட செல்கிறான். சாப்பிட்டு பணம் கொடுக்க நினைத்து பாக்கெட்டில் கையை விட, பணம் இல்லை. தனது பணத்தை பற்றி யோசிக்கும் போது ஒருவர் தன் மீது மோதியது ஞாபகம் வருகிறது. அந்த முதியவர் இறந்த வேளையில் தான் தனது பணம் பறி போனதை பற்றி அறிகிறான்.. அந்த இடத்திலும் திருட்டு நடந்ததை நினைத்து கண்கள் மேலும் கலங்கியது. இந்த மனிதர்களை கண்டு கோபம், விதவிதமான ஊர்திகளின் மேல் பயம், பார்த்த விளக்குகளில் எல்லாம் முதியவரின் முகம். நகரத்தில் இப்படி நடப்பதற்கும், கையில் இருந்ததை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டேன் என்று மனம் உடைந்து அழுகிறான் அழுகிறான், ஆனால் அவன் கண்ணீரை துடைக்க யாரும் வரவில்லை. ஆரம்பித்த இடத்திற்கு வருகிறான்(காட்டில் ). தற்போது அவனுக்கு எல்லாம் புரிகிறது.. அவன் தன் வாழ்க்கையை தொடங்குகிறான் அவனது சுதந்திர காட்டில். ..
கையில் இருப்பதே மேல். ......