முதிராகன்னி 5

மறுநாள் சாயாந்தரம் வேலைக்கு போய் விட்டு வந்தவுடன் நண்பன் சொன்னான்.
"மாப்ளே, இன்னைக்கு பகல் முழுக்க தூங்கமுடியலடா ... '
'ஏண்டா, வெயில் ஓவரா ...'
இல்லடா, பக்கத்து ரூம்காரன் வெளையாட்டுதான் ஓவரு...'
" விடுடா, புதுசா கல்யாணம் ஆன ஜோடி.. கொஞ்ச நாள் நல்லா ஜாலியா இருக்கட்டும்... '
'அதுக்காக இப்படியாடா, நேரம் காலம் தெரியாம ...'
' சரி, விடுறா...'
அன்றைய பொழுதும் அதே இம்சைகளோடு கழிய, எப்போது உறங்கி போனோம் என்றே தெரியாமல் உறங்கி போனோம்.
மறுநாள் காலை நண்பன் தட்டி எழுப்பினான்.
'என்னடா, லீவு நாள்ல கூட தூங்க விடாம எழுப்பிக்கிட்டு இருக்க...'
'நம்ம பக்கத்து ரூம் பொண்ணு ஆன்ட்டிகிட்ட ஏதோ சொல்லி அழுதுகிட்டு இருக்குடா...'
'அதுக்கு என்னை ஏண்டா எழுப்புற ...'
'வாடா, போய் என்ன ஏதுண்ணு தெரிஞ்சுகிட்டு வருவோம்'
அத நாம தெரிஞ்சுகிட்டு என்னடா பண்ணப்போறோம்.'
'நாலு விஷயங்களையும் தெரிஞ்சுகிறனுண்டா...'
முகம் அலம்பி விட்டு கீழே போனோம்.
'ஆன்ட்டி, என்ன விஷயம்... இந்த பொண்ணு ஏன் அழுகுது.."
'அதுவா, காலையில எந்திரிச்சி பார்த்தா அவவீட்டுகாரன காணோமாம். அதான்..'
"லவ் மேரேஜ்ஜார்..? அரேன்ஞ்சுடு மேரேஜ்ஜா..?"
"லவ் மேரேஜ் தானாம்..."
"இந்த பொண்ணு ஒரு பிரச்சினையில மாட்டிகிட்டு இருக்குப்பா... என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியல..."
" பிரச்சினையா... சொல்லுங்க ஆண்ட்டி... ஏதாவது பண்ண முடியுதான்னு பார்க்குறோம்..."
தொடரும்...

எழுதியவர் : பனவை பாலா (22-Jul-17, 4:23 pm)
சேர்த்தது : பனவை பாலா
பார்வை : 292

மேலே